மீண்டும் தாத்தா ஆனார் ரஜினி..சௌந்தர்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தை.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். இவரது இளைய மகள் சௌந்தர்யாவிற்கு தற்போது இரண்டாவது ஆக மகன் பிறந்துள்ள செய்தியை அவர் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், தன்னுடைய கடின உழைப்பால் இன்று இந்த இடத்தை அடைந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் கையில் சிறிதளவு பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார். அங்கு அவர் பல முன்னணி நிறுவனங்களில் ஏறி இறங்கி வேலை தேடி இருக்கிறார். ஆனால் அங்கு அவர் அனைவராலும் அவமானப்படுத்தப்பட்டார்.

மீண்டும் தாத்தா ஆனார் ரஜினி..சௌந்தர்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தை.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவிப்பு 1

விளம்பரம்

அப்போது அவர் மனதில் ஒரு சபதம் எடுத்தார். மீண்டும் இந்த நிறுவனங்களை தாம் அணுகும் போது ஒரு நடிகராக தான் வர வேண்டும் என்று அவர் சபதம் எடுத்தார். அதை நிறைவேற்றிக் காட்டும் விதமாக அவர் மிகப்பெரிய நடிகரானார். அபூர்வராகங்கள் என்ற படத்தில் நடிப்பதற்கு கே பாலச்சந்தர் வாய்ப்பு கொடுத்தார். அன்று தொடங்கி இன்று வரை அவர் சுமார் 168 படங்களில் நடித்த முடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது அவர் நெல்சன் உடன் இணைந்து தலைவர் 169 – ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் தாத்தாவான செய்தி தற்போது திரையுலகில் பரவி வருகிறது. அதாவது அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்திற்கு இரண்டாக மகன் பிறந்திருக்கிறார்.

தொடர்புடையவை  பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம், விக்ரம் ஒரு கெட்டப் பைத்தியம்.. போட்டு தாக்கிய ப்ளூ சட்டை

மீண்டும் தாத்தா ஆனார் ரஜினி..சௌந்தர்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தை.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவிப்பு 3

விளம்பரம்

மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இளைய மகள் சௌந்தர்யாவிற்கு ஏற்கனவே ஒரு தொழிலதிபருடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது. இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இரண்டாவதாக அவர் விசாகன் என்பவரை திருமணம் செய்திருந்தார். சௌந்தர்யா விசாகன் தம்பதிக்கு வேத் என்ற மகனும் இருக்கிறார். தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சௌந்தர்யா நானும் விசாகனும் வேத்தின் சகோதரனை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். அவருக்கு வீர் ரஜினிகாந்த் என்று பெயரிட்டுள்ளோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

மீண்டும் தாத்தா ஆனார் ரஜினி..சௌந்தர்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தை.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவிப்பு 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment