சூப்பர் கோபி அண்ணா..கலக்கிட்டீங்க.! கோபியை வாழ்த்திய டிடி, கவின், பிரியா பவானி ஷங்கர்.

நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள ஒரு செய்தி என்றால் அது நீயா நானா தான். நேற்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் நீயா நானா பல கட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளை நம்பும் சிலரையும், அதை எதிர்க்கும் சிலரையும் எதிரெதிரே அமர வைத்து விவாதங்களில் ஈடுபட்டு, அதற்கு ஒரு தீர்வையும் வழங்கி இருக்கிறது இந்த நிகழ்ச்சி. இதன் மூலமாக பலருக்கும் இந்த சமூகம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற பிம்பம் உடைகிறது. இதற்கு உதாரணமாக நேற்று நடந்த எபிசோடை சொல்லலாம். நேற்று படிக்காத கணவர்கள் வெர்சஸ் கணவர்களை விட அதிகம் சம்பாதிக்கும் படித்த மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சூப்பர் கோபி அண்ணா..கலக்கிட்டீங்க.! கோபியை வாழ்த்திய டிடி, கவின், பிரியா பவானி ஷங்கர். 1

விளம்பரம்

அப்போது பேசிய ஒரு பெண் தன் கணவருக்கு படிக்க தெரியாது, தன் மகளின் ரேங்க் கார்டை கணவர் வாங்கி ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். அதில் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார் என்று இளக்காரமாக பேசி கேலி செய்து சிரித்தார். இது அரங்கத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது கோபிநாத்தையும் ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அது குறித்து கேட்டபோது அந்த கணவர், என்னால் முடியாததை என் மகள் சாதிக்கும் பொழுது அதை நான் ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று வெகுளியாக கூறினார். இதனால் மனம் நெகிழ்ந்து போன கோபிநாத், நிகழ்ச்சி முடிவதற்கு முன்பு கொடுக்க வேண்டிய பரிசை பாதியிலேயே அழைத்து அவரின் மகள் கையாலேயே அந்த நபருக்கு வழங்கினார். மேலும் என்னால் முடியாததை என் மகள் செய்கிறாள் என்று நினைக்கும் தந்தையை தான் காவியமாக பார்ப்பதாகவும் கூறினார்.

தொடர்புடையவை  வினையாக மாறிய விளையாட்டு.! நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நாஞ்சில் விஜயன்..!

சூப்பர் கோபி அண்ணா..கலக்கிட்டீங்க.! கோபியை வாழ்த்திய டிடி, கவின், பிரியா பவானி ஷங்கர். 3 சூப்பர் கோபி அண்ணா..கலக்கிட்டீங்க.! கோபியை வாழ்த்திய டிடி, கவின், பிரியா பவானி ஷங்கர். 5 சூப்பர் கோபி அண்ணா..கலக்கிட்டீங்க.! கோபியை வாழ்த்திய டிடி, கவின், பிரியா பவானி ஷங்கர். 7 சூப்பர் கோபி அண்ணா..கலக்கிட்டீங்க.! கோபியை வாழ்த்திய டிடி, கவின், பிரியா பவானி ஷங்கர். 9

விளம்பரம்

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் அந்தப் பெண்ணை திட்டி தீர்த்து வந்தனர். ஒரு சபையில் வைத்து படிக்காத கணவரை இவ்வளவு ஏளனமாகவும் இளக்காரமாகவும் கேலி செய்து சிரிப்பது முறையல்ல என்று அவருக்கு அறிவுரைகளை கூற தொடங்கினர். அது ஒரு புறம் இருக்க கோபிநாத்தின் அந்த செயல்களை பலரும் பாராட்டி வருகின்றனர். கவின், பிரியா பவானி சங்கர், தொகுப்பாளியின் டிடி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் கோபிநாத்தை பாராட்டி twitter-யில் பதிவிட்டு வருகின்றனர். கவின் படிப்பிற்கும், பகுத்தறிவிற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்பாக்கள் பேரன்பின் அடையாளம்! இந்தக் காணொளியில் காவியமாய் தெரியும் அப்பாவுக்கும், ‘தன் அப்பா தோற்கவில்லை’ என்ற அழகு மகளுக்கும் எனதன்பும், வாழ்த்தும். என் அன்பிற்கினிய நண்பர் ‘நீயா நானா’ கோபிநாக்கு வாழ்த்துக்கள்.! நல்லது விஜய் தொலைக்காட்சி என்று பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

பிரியா பவானி ஷங்கர் தனது பதிவில், ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்! என்றும், டிடி தனது பதிவில், அந்த மகள் தனது அப்பா தோற்கவில்லை என்று கூறுவது அந்த மகளை எவ்வாறு அழகாக பெற்றோர்கள் வளர்த்து இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது, வாழ்த்துக்கள் கோபிநாத் அண்ணா என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோக்களை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Indiaglitz Tamil

விளம்பரம்

Leave a Comment