31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும் இணைந்து படம் ஒன்றுக்கு பாடல் பதிவு செய்யும் ஒரு காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கி வரும் “மார்கழி திங்கள்” படத்திற்காக இளையராஜா பாடல் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளையராஜா பாடலை கம்போஸ் செய்ய அருகில் அமர்ந்து பாரதிராஜா கேட்டுக் கொண்டிருக்கிறார். 31 வருடங்களுக்குப் பிறகு இரண்டு ராஜாக்களும் இணைந்து இருப்பது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் மார்கழி திங்கள் என்கிற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குவதன் மூலமாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான மனோஜ் பின்னர் பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால் தற்போது இயக்கம் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருப்பதாக தெரிகிறது. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இளையராஜா இணைந்திருக்கிறார்.
1992 ஆம் ஆண்டு நாடோடி தென்றல் என்ற படத்தில் பாரதிராஜாவுக்காக இசையமைத்திருந்தார் இளையராஜா. அதன் பிறகு கிட்டத்தட்ட 31 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு என்கிற சீரியலின் டைட்டில் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் இந்தக் கூட்டணி படத்தில் வேலை செய்து 31 ஆண்டுகளாகி விட்டது.இந்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து இருக்கின்றனர். இளையராஜா மற்றும் பாரதிராஜாவின் கூட்டணி இந்த முறை கண்டிப்பாக மக்கள் மனங்களை வெல்லும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.! Watch the below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O