விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது 55 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த ‘பூகம்பம்’ டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோற்றதால் பிராவோ மற்றும் அக்ஷயா இருவரும் வெளியேற்றப்பட்டு விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் இருவரையும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பியுள்ளனர்.

இவர்கள் இருவரும் உள்ளே வந்த பிறகு ஆட்டம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. வெளியில் போட்டியாளர்கள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது குறித்து வெளிப்படையாக இருவரும் கூறியதால் தங்களின் நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில் எட்டு பேர் சிக்கி உள்ளனர். தினேஷ், விசித்ரா, சரவண விக்ரம், மணி, பூர்ணிமா, அனன்யா, ஜோவிகா, கூல் சுரேஷ் என மொத்தம் எட்டு பேர் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். பலரும் 55 நாட்களாக எதுவுமே செய்யாத சரவண விக்ரம் தான் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.
கன்டென்ட் கொடுக்காமல் உள்ளே மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைல்டு கார்டாக வந்த அனன்யா கூட அவருக்கு பட்டத்தை கொடுத்திருந்தார். இந்த நிலையில் நமது தமிழ்க்ளிட்ஸ் இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நமது இணையதளத்தில் எடுக்கப்படும் வாக்கெடுப்பு முடிவுகள் தான் பெரும்பாலும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் முடிவுகளாக இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது வரை நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறது தமிழ்க்ளிட்ஸ்.
இந்த நிலையில் சரவண விக்ரம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் வனிதா மகள் ஜோவிகா சற்று பின் தங்கியிருக்கிறார். குறைந்த வாக்குகளைப் பிடித்து கடைசி இடத்தை பிடித்திருக்கும் ஜோவிக இந்த வாரம் வெளியேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நீங்களும் நமது இணையத்தில் எடுக்கப்படும் பிக்பாஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று வாக்களிக்கவும்.! https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/