தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே நாடு முழுவதும் இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

இந்த சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் முதலாவதாக சாச்சனா எலிமினேட் ஆகி சென்றுள்ளார்.

இதுகுறித்து தர்ஷாவிடம் பேசிய ரவீந்தர், தனக்கு வாக்கு அதிகமாக இருக்கும் பொழுது வேண்டுமென்றே சாச்சனாவை திருப்பி விட்டதாகவும், அதன்பின்னரே அனைவரும் தன்னை விட்டுவிட்டு சாச்சனாவுக்கு ஒட்டு போட்டு எலிமினேட் செய்ததாகவும் ரவீந்தர் கூறி இருப்பது ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.