பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள தனலட்சுமியின் ஆல்பம் பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸில் மக்கள் பிரதிநிதியில் இருந்து ஒருவராக கலந்து கொண்டுள்ளவர் தனலட்சுமி. இவர் பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் சண்டை போட்டு வருகிறார். நேற்று கமலஹாசன் தனது எபிசோடில் கூட உங்களிடம் மற்ற ஹவுஸ் மேட்ஸ் பேசவே தயங்குகிறார்கள். உங்களிடம் பேச்சினாலே சண்டை வந்துவிடும் என்று பயந்து விடுகிறார்கள் என்று கமல் கூறினார். அந்த அளவிற்கு தனலட்சுமியின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. தனலட்சுமியை பலரும் தற்போது நாமினேட் செய்துள்ளனர் .இந்த வார நாமினேஷனில் கூட தனலட்சுமி இருக்கிறார். பலரும் முயன்று கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பான பிக்பாஸை இப்படி உதாசீனமாக பயன்படுத்திக் கொள்கிறாரே என்று பலருக்கும் தனலட்சுமி மீது அனுதாபங்கள் கூட ஏற்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதாகும் தனலட்சுமி டிக்டாக் செய்து மூலமாக பிரபலமானார். ஒரு புது படம் வந்தால் அந்த படத்தைப் போலவே கெட்டப்புகளை போட்டுக் கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வந்தார். டிக் டாக் செயலி முடங்கிய பின்னர், instagram-ல் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரை பின்தொடர்பவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். பொம்மை டாஸ்க்கின் போது அசீம், தனலட்சுமி தான் தள்ளிவிட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் தான் தள்ளிவிடவில்லை என்ற கருத்தில் உறுதியாக இருந்து, குறும்படமும் கேட்டு வாங்கி தான் மீது குற்றம் இல்லை என்பதை தனலட்சுமி நிரூபித்தார். இதனால் தனலட்சுமி மீது சற்று மரியாதை கூடியது.
ஆனால் குறும்படம் போட்ட காரணத்தினால் என்னமோ அவருக்கு தன் மீது மமதை வந்து விட்டதாக தோன்றியது. ஹவுஸ் மேட்ஸ் பலரையும் மரியாதை இல்லாமல் பேச தொடங்கினார். அசீம் உடனும், ராபர்ட் மாஸ்டருடனும் தொடர்ந்து சண்டை போட்டு வந்தார் தனலட்சுமி. இந்த வாரம் கமலஹாசன் தனலட்சுமியை வறுத்து எடுத்து விட, தற்போது அமைதியாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தனலட்சுமி நடித்துள்ள ஆல்பம் பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பறை என்று அந்த பாடலில் தனது தந்தை ஊருக்காக பறை வாசிக்கிறார். அவர் இறந்த பின்பு அந்த ஊருக்குள் அவரது பிணத்தை எடுத்து வரக்கூடாது என்று சொல்ல அதை மீறி எப்படி கஷ்டப்பட்டு தந்தையின் சடலத்தை எரிக்கிறார் என்பது குறித்த சமூக அவலத்தை அழகாக நடித்துக் காட்டியிருக்கிறார் தனலட்சுமி.
மேலும் தந்தை இறந்த பிறகு தன்னை பறை அடிக்க சொல்லியவர்களிடம் உங்கள் சாமிக்கு கண்ணிருந்தால் திறந்து பார்க்கச் சொல், நாங்கள் உங்களுடன் எவ்வளவு போராடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியும் அதிரடியாக வசனங்களும் பேசி இருக்கிறார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Think Music India