நடிகர் சிவகுமாரின் மகளும் சூர்யாவின் தங்கைமான பிருந்தா பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பாடலை அப்படியே பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவரது குரல் வளத்தை பார்த்த பலரும் நீங்கள் ஏன் திரையில் பாடக்கூடாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பழம்பெரும் நடிகர் சிவக்குமார் குடும்பம் கலை உலகத்தைச் சேர்ந்தவர்கள். சிவக்குமார், அவரது இரு மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள். சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது தங்கை பிருந்தாவும் பின்னணி பாடகியாக உருவாகி வருகிறார். சூர்யா மற்றும் கார்த்திக் இருவருக்கும் கடைக்குட்டி தங்கை தான் பிருந்தா. இவரை சிவக்குமார் சினிமா துறைக்கு கொண்டு வரவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாறாக அவரை படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்து விட்டார். 2005ம் ஆண்டில் தொழிலதிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். சில வருடங்கள் குடும்பத்துடன் செலவழித்த அவர், தற்போது சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். முறையாக பாடலை கற்றுக் கொண்டுள்ள அவர் பாடல்கள் பாடியும், பல நடிகைகளுக்கு பின்னணியும் பேசியிருக்கிறார். ரன்பீர் கபூர் ஆலியா நடிப்பில் வெளிவந்தல்ல பிரம்மாஸ்திரா படத்தின் தமிழ் பதிவிற்கு ஆலியா பட்டுக்கு பின்னணி பேசியிருக்கிறார் பிருந்தா சிவக்குமார். மேலும் ஜோதிகா நடித்த ராட்சசி படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஒரு பாடலை அப்படியே பாடியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையும் அவர்கள், தோழி வானதியும் பாடும் பாடலான “காதோடு சொல்” என்கின்ற பாடலை அவர் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த பலரும் உங்களுக்கு குரல் வளம் நன்றாக இருக்கிறது, நீங்கள் ஏன் திரைத்துறையில் பாடக்கூடாது என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7