பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா தற்போது தனது வீட்டை சுற்றிக் காண்பித்து வீடியோ ஒன்றை தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோ மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது. பொதுவாகவே நமக்கு பிடித்த நடிகர்களின் வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ போடுவது என்பது நமக்கு பிடித்தமான ஒன்று. நாமும் அந்த வீடியோக்களை விரும்பி பார்ப்பதும் வழக்கமாக நடப்பது தான். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ள ஒரு முக்கியமான பிரபலம் தான் சம்யுக்தா. தற்போது தனது வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ரியாலிட்டி ஷோர்களின் முதன்மை இடம் வகிக்கிறது பிக்பாஸ். விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்க்க பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சீசன் 4ல் கலந்து கொண்ட ஒரு முக்கியமான போட்டியாளர் தான் சம்யுக்தா. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றிருந்தார். அதற்கு முன்பே இவர் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற சீரியலில் துர்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளனியாக இருக்கும் பாவனாவின் நெருங்கிய தோழிதான் சம்யுக்தா. இவர்கள் இருவரும் அடிக்கடி நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பாபனாவின் சிபாரிசின் பெயரில்தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்ற தகவலும் வலம் வந்து கொண்டிருந்தது.
பிக்பாஸ்க்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் சம்யுக்தா. சமீபத்தில் வெளியாகி இருந்த காபி வித் காதல் படத்திலும் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது தனது வீட்டை சுற்றிக் காண்பித்து ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பல லட்சம் பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். சுமார் 8 லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Credits: Samyuktha Shan