பிக்பாஸ் சீசன் 6ல் நுழைந்த சூப்பர் மாடல்.! யார் இந்த ஷெரினா? முழு விபரம் இதோ.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6ல் அடுத்த போட்டியாளராக சூப்பர் மாடல் ஷெரினாவை களம் இறக்கியுள்ளது விஜய் டிவி. மாடலிங் துறையில் இருக்ககும் பலருக்கும் ஒரு சின்ன வாய்ப்பாவது வெள்ளித்திரையில் கிடைத்து விடாதா என்று காத்துக் கொண்டு இருப்பது வழக்கம். அந்த வகையில. தற்போது மிகப்பெரிய வாய்ப்பு சூப்பர் மாடலான ஷெரினாவுக்கு கிடைத்துள்ளது. ஷெரினா ஒரு சர்வதேச மாடல், கேரளாவில் பிறந்த இவர் கர்நாடகா பெங்களூரில் வளர்ந்தவர். தமிழ் மற்றும் கன்னடத்தில் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார் ஷெரினா. அதுமட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் சாதனை செய்துள்றார்.பெங்களூரில் படித்த இவத் பைலட் ஆக வேண்டுமென்று நினைத்தார். ஆனால் சில காரணங்களால், 2009 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் நுழைந்தார்.

பிக்பாஸ் சீசன் 6ல் நுழைந்த சூப்பர் மாடல்.! யார் இந்த ஷெரினா? முழு விபரம் இதோ.! 1
இவர் எப்படி மாடல் ஆனார் என்கிற கதை மிகவும் சுவாரசியமானது. ஒரு முறை தனது நண பர்களுடன் சேர்ந்து மாலுக்கு சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் போட்டியாளர்களுக்கு ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஷெரினாவோட நண்பர்கள் நீயும் போய் கலந்துக்கோ என்று ஊக்கம் கொடுக்க, ஷெரினாவும் அந்த போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் 14 பேர் தேர்வானதில் அதில் ஒருத்தராக ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் ஆக ஷெரினாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். . அன்றைக்கு இவருக்கு கிடைத்த பிரபலம் மாடலிங்கை ஒரு தொழிலா எடுத்துக்கிட்டு தற்போது முழு நேரமாக அதில் இறங்கியுள்ளார்.

பின்னர் அவருக்கு சூப்பர் மாடல் என்று முடி சூட்டப்பட்டது. இதுக்கு அதன் பிறகு விஜயா மில்க், மலபார் கோல்ட், சென்னை சில்க்ஸ் போன்ற பல விளம்பரங்களில் நடித்த தொடங்கினார். மேலும் சமுத்திரகனியோட ஒரு விளம்பரத்தில் நடித்த போது, சமுத்திரகனிக்கு ஷெரினாவை ரொம்ப புடிச்சபோக, தன்னுடைய படத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொண்டார். சமுத்திரக்கனி நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான வினோதயா சித்தம் என்கிற படத்தில் சமுத்திரக்கனி கூட சேர்ந்து நடித்தார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானதனால் இவரின் முகம் பெரிய அளவு திரையில தெரியவில்லை. ஆனால் பிக்பாஸுக்குப் பின்னர் இவர் பெரிய அளவில் பேசப்படுவார் என்பது உறுதி. பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சூப்பர் மாடலை இறக்குற மாதிரி இந்த முறையும் சூப்பர் மாடல் ஷெரினாவை உள்ள அனுப்ப இருப்பதாக தெரிகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்