முதல் ஆளாக பிக்பாஸ்க்குள் நுழைந்த ஜி.பி.முத்து.! செம்ம காமெடி பண்ணிட்டு இருக்காரே தலைவர்

டிக் டாக் என்ற செயலி பலரது வாழ்க்கையும் மாற்றி இருக்கிறது. நடிக்க வேண்டும், நடிகர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் டிக் டாக் செயலில் வந்து பலரும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதில் குறிப்பிட்டு சொல்லும் ஒரு நபராக இருப்பவர்தான் ஜி பி முத்து. ஆரம்பத்தில் இவருக்கு வந்த கெட்ட கமெண்ட்ஸை பார்த்து இவர் கோபமடைந்து கமெண்ட் போடுபவர்களை திட்ட ஆரம்பித்தார். பின்னர் அதுவே ஒரு கட்டத்தில் பழகிப்போய், இவர் திட்டும் வீடியோக்களுக்கு ஆதரவு பெருகியது. இவர் அது போல் திட்டுவதை பலரும் ரசிக்க ஆரம்பித்தனர். அன்று தொடங்கி இன்று வரை அந்த வார்த்தைகளை மாறாமலும், யார் மனதையும் புண்படுத்தாமலும் காமெடியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார் ஜி பி முத்து. குறிப்பாக இவர் கடிதம் படிக்கும் வீடியோக்கள் பல லட்சம் பார்வையாளர்களை தாண்டுவது வழக்கமாக இருக்கிறது.

முதல் ஆளாக பிக்பாஸ்க்குள் நுழைந்த ஜி.பி.முத்து.! செம்ம காமெடி பண்ணிட்டு இருக்காரே தலைவர் 1

விளம்பரம்

தற்போது பிக்பாஸில் முதல் போட்டியாளராக ஜிபி முத்து உள்ளே சென்றிருக்கிறார். டிக் டாக்கில் செத்த பயலே நார பயலே என்று வீடியோக்களை வெளியிட்டு மக்களை மகிழ்வித்து வந்தவர் ஜி பி முத்து. பின்னர் இவர் youtubeல் சேனலை தொடங்கினார். அப்போது இவருக்கு ரசிகர்கள் பலரும் கடிதங்களை அனுப்பினார். அந்த கடிதங்களை பிடித்து படிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பல லட்சம் பின் தொடர்பவர்களை அள்ளி இருந்தார் ஜி பி முத்து. தற்போது இவர் படங்களிலும் நடித்து வருகிறார். தனது எதார்த்தமான பேச்சாலும், காமெடியாலும் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இடத்தை அடைந்தவர் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்று பிக்பாஸில் சீசன் 6ல் முதல் ஆளாக நுழைந்திருக்கிறார்.

தொடர்புடையவை  பாக்கியவுடன் போனில் பேசிக் கொண்டிருந்த கோபி.! செம்ம டென்ஷன் ஆகி எழுந்து சென்ற ராதிகா.!

முதல் ஆளாக பிக்பாஸ்க்குள் நுழைந்த ஜி.பி.முத்து.! செம்ம காமெடி பண்ணிட்டு இருக்காரே தலைவர் 3

விளம்பரம்

ஜிபி முத்துவின் தனி வாழ்க்கையை பொறுத்தவரை இவருக்கு மனைவி பிள்ளைகள் உண்டு. இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். மனோ விஷ்ணு என்ற இரட்டையர்களும் இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். தனது காமெடியான பேச்சால் என்று பிக்பாஸ் வரை சென்று இருக்கிறார் ஜி பி முத்து. உள்ளே சென்ற அவர் தனியாக இருக்க பயமாக இருக்கிறது என்று கேமராவை பார்த்து புலம்பி கொண்டிருக்கிறார். பிக்பாஸில் அவர் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment