ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் விக்ரமனே உங்களுக்கென்று வந்தால் அந்த அறிவு கூட இல்லையா என்று நெட்டிசன்கள் திடீரென விக்ரமனை திட்டி தீர்த்து வருகின்றனர். சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் விக்ரமன். கடந்த ஐந்து சீசன்களை போல் அல்லாமல் இந்த முறை வித்தியாசமான போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறது பிக்பாஸ். இதில் முதல் முறையாக அரசியல்வாதி ஒருவர் உள்ளே சென்றார் என்றால், அது விக்ரமன் தான். விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாநில செய்தி தொடர்பாளர். இவர் உள்ளே வந்த முதல் வாரமே யாரிடமும் பேசுவதில்லை என்று காரணம் காட்டி அவரை வெளியில் படுக்க வைத்தனர். ஆனால் தற்போது விக்ரம் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். வாக்கெடுப்பிலும் முன்னிலையில் எப்போதும் இருக்கிறார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிய செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த நாடகம் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே முடிக்கப்பட்டது. பின்னர் யூடியூப் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அதன் மாநில செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். பிக பாஸ் வரலாற்றில் முதல்முறையாக அரசியல்வாதியை களம் இறக்கி உள்ளார்கள். ஆரம்பம் முதலே விக்ரமனை சுற்றியே சண்டை சச்சரவுகள் என்று இருந்து வருகிறது. எங்கு தப்பு நடந்தாலும் முதல் ஆளாகாக போய் கேட்பதால், இவரை பலரும் எதிர்க்க தொடங்கினர்.
If #Vikraman notices every action..every action if his will be noted…
So much water waste…pic.twitter.com/zpB6HBOikt#BiggBossTamil6
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 7, 2022
#Vikraman in Samugaa Porupu !!
Thaneerai Semikum Bodhu Eduthathu 😉@ikamalhaasan sir idhai Patrriyum Thaangal indha Vaaram Pesuveergal ena nambugirom !!
Kai Thattu Vaangiyavar Thattu Kaluvumbodhu#DontWastewater#BiggBossTamil #biggbossseason6tamil #BiggBossTamilseason6 pic.twitter.com/MVyPSDzLt0
— Joe Michael Praveen (@RazzmatazzJoe) November 7, 2022
KH is definitely going to address about water wastage. number 1 culprit is #Vikraman #BiggBossTamil6
— ஸ்ரீமதி Celine ♉ (@SrimathiCeline) November 7, 2022
விக்ரமன் ஒரு சார்பாக பேசுவதாக ஹவுஸ்மேட்ஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது விக்ரமன் செய்த ஒரு செயலை இணையத்தில் பகிர்ந்து, ஊருக்கு தான் உபதேசம் செய்வார் அவருக்கு என்று வந்தால் அதெல்லாம் கிடையாது என்று விக்ரமனை திட்டி தீர்ப்பு வருகின்றனர். அதற்கு பிண்ணனி காரணம் என்னவென்றால், கை கழுவுவதற்காக குழாயை திறந்து விட்டு செல்லும் அவர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து மூடுகிறார். அப்போது வெகுநேரமாக தண்ணீர் வெளியேறி வீணாகிறது. சென்னையில் தண்ணீர் கஷ்டம் இருந்தபோது, பிக்பாஸ்ஸின் சில சீசன்களில் நீச்சல் குளத்தை மூடி இருந்தனர். மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு அளந்து அளந்து தண்ணீரை கொடுத்தனர்.



அப்படிப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது தண்ணீர் அவ்வளவாக வீணாகிறது,அதை சமூக அக்கறை கொண்டவர் என காட்டிக் கொள்ளும் விக்ரமன் செய்கிறார்,இதை கமல் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார். இதை கமல் கண்டிக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
பரவாயில்லையே பெரிய குற்றத்தை கண்டுபிடித்து விட்டீர்கள். தண்ணீர் குழாயை மறந்து மூடாமல் விட்டிருபார். வீட்டில் தான் பேசுவதே சரி என்று பேசுபவர் அசீம். ஆனால் நிறையப்பேர் கார்னர் செய்வது விக்ரம் மற்றும் தனலட்சுமி. காரணம் உள்மனது, காழ்ப்புணர்ச்சி. சென்னையின் தண்ணீர் பஞ்சம் இதனால் தானோ. நிறைய தான் வீனடித்துவிட்டார் டாக்டர் இளவரசி.