மகனுடன் அந்தரத்தில் பறந்த பிக்பாஸ் பிரபலம்..பயத்தில் அலறிய குட்டி மகன் | Vijaya Lakshmi

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 2ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் விஜயலெட்சுமி. இவர் குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்து கொண்ட வெற்றி பெற்ற கனியின் உடன் பிறந்த சகோதரி ஆவார். 2007ம் ஆண்டில் வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுதான் இவரின் முதல்படம், முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தியதால் தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. வீடியோ கீழே உள்ளது.

மகனுடன் அந்தரத்தில் பறந்த பிக்பாஸ் பிரபலம்..பயத்தில் அலறிய குட்டி மகன் | Vijaya Lakshmi 1

வெள்ளித் திரையில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், சின்னத்திரை பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார் விஜயலெட்சுமி. சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்ற சீரியலில் நடித்தார். பின்னர் பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்த காரணத்தால் சன் டிவியை விட்டு வெளியேறி பிக்பாஸில் கலந்து கொண்டார். அடிதடி சண்டை என அதிரடியாக விளையாடி வந்தார். மக்களின் செல்வாக்கும் இவருக்கு இருந்தது. ஆனாலும் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற நிகழ்ச்சியிலும் விளையாடி டைட்டிலும், ஒரு கோடி பணமும் வென்றார் விஜி. Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் விஜயலெட்சுமி அவ்வபோது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இவருக்கு நிலன் என்ற மகன் உள்ளார். அவரது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு மகனுடன் சேர்ந்து கயிற்றில் பறந்து சென்று இருவரும் சாசகம் செய்துள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் விஜி. நிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்