பிரபலமாக வேண்டும் என்பதற்காக சில நெகடிவ் ப்பளிசிட்டி வேலைகளை செய்வது இந்த காலத்தின் ட்ரெண்ட் ஆகும். அப்படி சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருப்பவர்தான் ஸ்ரீநிதி. வலிமை படம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டி வைரலனாது. அவரை அஜீத் ரசிகர்கள் அசிங்கமாக திட்டி தீர்த்துவிட்டனர். இதனால் கண்ணீர் மல்க ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு “அஜீத் ரசிகர்களாக இருந்தால் பெண்களை இழிவாக பேசாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். பிறகு இந்த சர்ச்சை மெல்ல ஓய்ந்தது. பிறகு தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவ்வபோது வீடியோ வெளியிட்டு வந்தார்.

ஒருநாள், சிம்பு எனக்காகதான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். இதை வழக்கம் போல் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று எண்ணி இருந்த நிலையில் நேற்று அவர் போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. அதில் சிம்புவின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து கொண்டு என்னையும், சிம்புவையும் சேர்ந்து வைங்க என்றும், ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் போராடுவீங்களா? எங்க காதலுக்கு எல்லாம் போராட மாட்டீங்களா என போட்டு இருந்தார். மேலும் சிம்பு தனக்காகதான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார் என்றும் கூறி வந்தார்.

இது கடும் சர்ச்சையை கிளப்பியது. ஸ்ரீநிதியின் பேச்சுகளும், செயல்களும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ஸ்ரீநிதியை பார்த்து மூடிட்டு போடி என்றும், எனக்குனே வராளுங்க சனினுங்க என்று காட்டமாக திட்டியுள்ளார் காஜல். நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக ஸ்ரீநிதி இவ்வாறு செய்கிறார் என்றும், அந்த பெண்ணிற்கு மனநல ஆலோசனை தேவை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.