நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் கவினுக்கு பிக் பாஸ் மிகப்பெரிய வாய்ப்பை தமிழ் சினிமாவில் வழங்கி உள்ளது. ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்து வந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் தற்போது கதாநாயகனாக ஜொலித்து வருகிறார். இவர் சினிமா வாழ்க்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் இவர் நடித்த லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த டாடா படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது . தொடர்ந்து படங்களை கொடுத்து சினிமாவில் நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் கவின். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் பிளாடி பெக்கர் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து உள்ளார்.நாளை மறுநாள் இப்படம் வெளியாக உள்ளது.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கும் நிலையில்,தற்போது இப்படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : SUNTV