தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தனது கடின முயற்சியால் இன்று தனக்கான சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளார் அஜித். இவர் படங்கள் வெளியாகும் நாள் தான் இவரின் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம் என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு ரசிகர்கள் அஜித்தை மனதில் வைத்து உள்ளனர்.

அஜித்திற்கு கடைசியாக வெளியாகிய வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளது. படத்தில் உள்ள மீதமுள்ள வேலைகள் தொடங்கி உள்ளது. தற்போது அஜித் கார் ரேஸில் களம் இறங்கி உள்ளார். அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. ரேஸில் அஜித் ஜெயிக்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Thrilled to be testing the Porsche GT3 Cup car at the Dubai Autodrome Circuit! 🏁🔥 #AjithKumarRacing #PorscheGT3 #DubaiAutodrome #RacingTesting #Venusmotorcycletours #Aspireworldtours pic.twitter.com/EuR0q0SqED
— Suresh Chandra (@SureshChandraa) October 29, 2024