விமர்சனம் என்ற பெயரில் சர்ச்சையான கருத்துக்களை கூறி இணையவாசிகளிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் ஒரு நபர்தான் மாறன். இவரை மாறன் என்று சொல்வதை விட ப்ளூ சட்டை என்று சொன்னால் பலருக்கும் தெரியும். எப்பேர்பட்ட நடிகராக இருந்தாலும் சரி, எத்தகைய இயக்குனர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் நடிக்கும் படங்களை விமர்சனம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் ப்ளூ சட்டை. ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று கூட புரியாமல் படத்தின் நிறைகளை எல்லாம் விட்டு விட்டு குறைகளை மட்டுமே கூறுகிறார் என்பது இவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஒரு படம் எடுத்து பாருங்கள் அப்போது அந்த கஷ்டம் புரியும் என்று இணைவாசிகள் திட்டி தீர்க்க “ஆன்டி இந்தியன்” என்ற படத்தை எழுதி இயக்கினார். ஆனால் இந்த படமும் சரியாக ஓடவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகி மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள விக்ரம் படம் குறித்து அவர் தன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்ச்சியாக கொல்லும் மர்மமான கும்பலை கண்டுபிடிக்கும் காட்சிகள் தான் இந்த படத்தின் கதை. கமல் படம் 4 வருடத்திற்குப் பின் வெளிவந்துள்ளதே என்று போய் பார்த்தால் மசாலா படத்திற்கு என்று உள்ள அருத பழசு கதையை எடுத்து வைத்துள்ளனர் என்று விமர்சித்தார். மசாலா படம் என்றாலே வில்லன் அரசியல்வாதியாக இருப்பான், கட்டப்பஞ்சாயத்து பண்ணுவான், பெண்களை கடத்துவான், கார்ப்பரேட் வில்லன், இல்லைனா கஞ்சா கடத்துவான்.. இதில் விக்ரம் படம் 5வது வகையை சார்ந்தது என்றும், இது ஒரு அருத பழசு கதை என்றும் கூறினார்.
மேலும் ட்விஸ்ட் என்று வைத்த இடமெல்லாம் பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிட்டது, மேலும், லோகேஷ் கனகராஜ் இந்த படம் பார்ப்பதற்கு முன்பு கைதி படம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று பேட்டி கொடுக்கிறார், இவரின் படத்தை பார்க்க வேண்டுமானால் இவர் எடுத்த எல்லா படத்தையும் பார்த்துவிட்டா வர முடியும் என்று விமர்சித்தார். இவராவது பராவாயில்லை 4 படம்தான் எடுத்து இருக்கிறார் அட்லீ எல்லாம் இப்படி சொன்னால் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து வந்த படங்களை எல்லாம் பார்க்க வேண்டுமே என்று அட்லீயை கலாய்த்து தள்ளினார். படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் நன்றாக இருந்தது அதற்கு காரணம் கமல், ஃபகத், விஜய் சேதுபதி நடிப்புதான் காரணம், சமீபத்தில் வந்த மசாலா குப்பைகளுக்கு விக்ரம் எவ்வளவோ தேவலாம் ஒரு முறை படத்தை பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.. ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை நீங்களும் காண..Watch the below video
Video Courtesy: Tamil Talkies