தென்தமிழகத்தில் விநோயோகிஸ்தராக இருந்தவர் ஆர்.கே.சுரேஷ். சினிமா மீதும் நடிப்பின் மீதும் அலாதி ஆசை கொண்ட இவர் இயக்குனர் பாலாவால் சசிகுமாரின் “தாரை தப்பட்டை” படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகினர். படத்தின் முதல் பாகத்தில் மிகவும் வெகுளியாக இருக்கும் இவர் இரண்டாம் பாதியில் வரலட்சுமிக்கு கொடுக்கும் இம்சை பார்ப்போருக்கு பதபதைப்பை கொடுத்தது. அடுத்து விஷாலின் “மருது” படத்தில் மீண்டும் “ரோல்க்ஸ் பாண்டியன்” கதாபாத்திரத்தில் இன்னும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அண்மையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்த ’விசித்திரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ’காடுவெட்டி’ என்ற படத்தின் டீஸர் இப்பொது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
’கையில் அரிவாளுடன் இருக்குற எங்ககிட்ட வச்சு கிட்டா, அரிவாளைத்தான் எடுப்போம் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தற்போது நடக்கும் முக்கிய சமூகப் பிரச்சனை ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுதான் கிடைச்சதா? என்ற வசனத்துடன் இந்த டீசர் முடிவடைந்ததை அடுத்து, அது எந்த சமூகப் பிரச்சனை என்பதை இந்த டீசரை பார்க்கும்போது யூகிக்க முடிகிறது.

ஆர்கே சுரேஷ் ,சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்கியுள்ளார். ’வணக்கம் தமிழ்’ சாதிக் இசையில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் புகழேந்தி ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. நீங்களும் டீஸர் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Video Courtesy – DivoMusic