பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ள புல்லட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் சுஜா வருணி. இவர் சீசன் 1-ன் போது Wild Card என்ட்ரியாக உள்ளே வந்தார். அப்போது இவருக்கும், சிநேகனுக்கும் பல பிரச்சினைகள் ஏற்ப்பட்டன. சினேகன் விளையாட்டின் போது தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்ற விமர்சனங்களை முன் வைத்தவர். ஆனால் இவரால் கடைசி வரை தொடர முடியவில்லை. குறைவான வாக்குகள் பெற்ற காரணத்தினால் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் அவர்களின் மகன் சிவாஜி தேவ்வை திருமணம் செய்து கொண்டார். சிவாஜி தேவ் சுஜாவை விட 5 வயது இளையவர். என்ற போதிலும் 12 வருடங்களுக்கு முன்பு நட்பில் ஆரம்பித்த இவர்களின் வாழ்க்கைப்பயணம் பின்பு காதலாக மாறி இறுதியில் இவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு அத்வைத் என்ற மகனும் உண்டு. சுஜா தன மகனுடன் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருவது வழக்கம்.

அதே போல தனது கணவருடன் நடனம் ஆடி அதையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். தற்போது தனது நண்பர் ஒருவருடன் ட்ரெண்ட் ஆகி வரும் புல்லட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Video Courtesy: Tamil Viral Videos 24×7