இரண்டு தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் ரசிகர்கள் கோஷம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரஜினிகாந்தின் பக்கத்து வீட்டு பெண்மணி ரசிகர்களை திட்டி தீர்த்திருந்தார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்தை மிகக் கடுமையாக தாக்கி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். பண்டிகை காலங்களில் சூப்பர் ஸ்டாரை சந்தித்து அவரிடம் நேரில் வாழ்த்து பெற வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. அதுபோலவே ரசிகர்களுக்கு வெளியில் வந்து கையை காட்டி விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் ரஜினியின் வீட்டு வாசலில் பேரிக்கார்டுகள் போடப்படுவதால் இரண்டு அடி தூரம் தள்ளி நின்று தான் ரசிகர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.

இதனால் ரஜினி வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று பொங்கலை ஒட்டி வழக்கம்போல ரஜினி வீட்டிற்கு சென்ற ரசிகர்கள் “தலைவா தலைவா” என கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பக்கத்து வீட்டு பெண்மணி வெளியில் வந்து, “உங்களுக்கு திறமை இருந்தால் உங்கள் தலைவர் வீட்டிற்குள் சென்று கத்துங்கள், எதற்காக எங்கள் வீட்டிற்கு அருகில் கத்திக் கொண்டிருக்கிறீர்கள்? எங்களால் நல்ல நாளில் கூட நிம்மதியாக சாமி கும்பிட முடியவில்லை. வாசலில் போட்டு இருந்த கோலத்தை எல்லாம் அழித்து இப்படி அலங்கோலமாக்கி விட்டீர்கள்” என்று வேதனையில் திட்டி தீர்த்து விட்டு சென்றார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்
அதில், “தன் வீட்டு மெயின் கேட்டில் இருந்து பல அடி தூரத்தில் ரசிகர்களை நிறுத்தி… கேட் பின்புறம் ஸ்டூலில் ஏறி கும்பிடு போடுவது தலீவரின் வழக்கம். ஆகவே.. பக்கத்துவீட்டு அருகில் ரசிகர்கள் நிற்பார்கள். நேற்று நடந்த சம்பவத்தில்.. பக்கத்து வீட்டார் அதிகாலையில் எழுந்து மணிக்கணக்கில் போட்ட பொங்கல் கோலத்தை ரசிக குஞ்சுகள் கால்களால் மிதித்து கலைத்து விட்டார்கள். அந்த அம்மா குடும்பத்துடன் இறைவனை வணங்கும்போது.. டைமிங்காக.. தலைவர் வெளியே வந்து வணக்கம் போட.. ‘தலைவா தலைவா’ என கோஷம். அம்மாவால் நிம்மதியாக உள்ளே கும்பிடவும் இயலவில்லை.
வெளியே வந்து பார்த்தால் கோலம் அலங்கோலமாகி இருந்தது. அந்த அம்மா அப்படியே ரஜினி வீட்டு வாசலை பார்த்தார். அது.. சற்றும் கலையாமல் ஜம்மென்று இருந்தது. அதன்பிறகுதான் தலீவருக்கும், ரசிக குஞ்சுகளுக்கும் பொங்கல் வைத்து அதிரடி காட்டினார் அந்த அம்மா. போயஸ் கார்டன் அம்மா என்றாலே தலைவருக்கு எப்போதும் பீதிதான் எனும் வரலாறு தொடர்கிறது.”என்று அவர் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார்.