Categories: சினிமா

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் குறித்து முக்கிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு. !

வெளியிட்டது

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை தற்போது படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவித்திருக்கின்றனர். கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட் ஹாலிவுட் வரை சென்று தனது திறமையான நடிப்பால் பல இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஒரு நடிகர்தான் தனுஷ். இளைஞர்கள் மட்டும் இல்லாமல் ஃபேமிலி ஆடியன்சையும் அவ்வப்போது கவர்ந்து வருகிறார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தனுஷே தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலைகளில் எப்போது வெளியாகும் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் குறித்து முக்கிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு. ! 1

கர்ணன், அசுரன், திருச்சிற்றம்பலம், வாத்தி என்று தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதன் மூலமாக ஃபேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்து வைத்து இருக்கிறார் நடிகர் தனுஷ். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் தனுஷின் ரசிகர்களாக மாறிப் போயிருக்கின்றனர். மேலும் திருச்சிற்றம்பலம் வாத்தி போன்ற படங்களில் 100 கோடி வசூலை குவித்து சாதனையும் படைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது தனுஷ் கைவசம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் கடந்த நிலையில் படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது. மேலும் இந்த படம் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பாகவும், சுதந்திரம் வாங்கிய பின்னர் 1990 காலகட்டத்தில் நடப்பது போலவும், சமீபத்திய காலகட்டத்தில் நடப்பது போல என மூன்று பாகங்களாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஜான் கொக்கேன், சந்தீப் கிஷன், நிவேதிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பீரியாடிக் கதையம்சம் கொண்ட படம் என்பதால் மலை, காடு போன்ற படங்களில் இந்த படத்திற்கு நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் மதுரையில் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளது. தனுஷ் போராளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஆனால் ஃபர்ஸ்ட் லுக் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்ததால் தனுஷின் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வருகிற ஜூன் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் தனுஷின் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்