Categories: சினிமா

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருடன் இணைந்து பட்டையை கிளப்பிய தனுஷ்..! ‘கோரனாரு’ பாடல் இதோ..!

வெளியிட்டது

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் பாடலான ‘கோரனாரு’ என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலில் தனுசுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நடனமாடுகிறார். குத்து பாட்டாக உருவாகியிருக்கும் அந்தப் பாடல் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12ம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் படக் குழுவினர் அறிவித்திருந்தனர். படம் ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே இருப்பதால் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருடன் இணைந்து பட்டையை கிளப்பிய தனுஷ்..! 'கோரனாரு' பாடல் இதோ..! 1
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என்று படத்தை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்து இருந்தது. அதன்படி ‘கோரனாரு’ என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த பாடலில் கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் உடன் இணைந்து நடிகர் தனுஷ் நடனத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் தனுசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் சந்தீப் கிஷனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


தற்போது தேனிசைத் தென்றல் தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலை உமாதேவி என்பவர் எழுதி இருக்கிறார். பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த பாடலைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்