கேஜிஎஃப் இந்த வார்த்தையை காதில் கேட்காத நபர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு கன்னட திரையுலகம் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ள ஒரு படம்தான் கேஜிஎஃப். இந்த படத்தின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார் யாஷ் என்று சொன்னால் அது மிகையில்லை. 2018ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் பாகம் கொடுத்த வெற்றி இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.

சமீபத்தில் இரண்டாம் பாகம் வெளியாகி நைட் ஷோ கூட ஹவுஸ் ஃபுல் ஆகி ஓடிக் கொண்டிருந்தது. இந்த படத்தில் வரும் மெஹபூபா பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி யூடியூப்பில் ட்ரெண்டிங் 1ல் இருந்து கொண்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. மாடல் ஆக இருந்த இவர் கேஜிஎஃப் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்ற செய்தியோடு இரண்டாம் பாகம் முடிகிறது. இதனால் கேஜிஎஃப் 3 குறித்த ஆவல் மக்களிடையே வெகுவாக எழுந்துள்ளது.

கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகம் படபிடிப்பு குறித்து பேட்டியளித்துள்ள தயாரிப்பாளர் விஜய் வருகிற அக்டோபர் மாதத்தில் பாகம் 3 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருந்தார். தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் இந்த்படத்தை பார்த்துவிட்டு ஒரு ட்வீட் ஒன்றைப் போட்டுள்ளார். அதில் “இறுதியாக கேஜிஎஃப் 2 படத்தை பார்த்தேன். திரைக்கதை, வசனம், எடிட்டிங் ஆக்ஷன் எல்லாமே சிறப்பாக இருந்தது, யாஷின் ஸ்டைல் மாஸாக இருந்தது, இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டை நீங்களும் காண.. Twitter Original Source from: Shankar Shanmugam
Finally saw #KGF2 Cutting edge style Storytelling,Screenplay&Editing.Bold move to intercut action&dialogue,worked beautifully.Revamped Style of Mass 4 the powerhouse @TheNameIsYash Thanks Dir @prashanth_neel 4 giving us a “periyappa” experience.@anbariv Terrific💥👏💐to the Team
— Shankar Shanmugham (@shankarshanmugh) May 17, 2022