திரைத்துறையில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்தவர்களுக்கு வரமாக அமைந்தது தான் டிக் டாக் செயலி. இந்த செயலி வருகைக்குப் பின்னர் பாடல்களை போட்டுக்கொண்டு ஆடுவது, பாடுவது, நடிப்பது என தங்கள் திறமைகளை பலரும் வெளிக்காட்டத் தொடங்கினர். ஆனால் இதுவே ஒரு கட்டத்தில் பலருக்கும் சாபமாக மாறிப்போனது. பலரும் எல்லை மீறி ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக நடனம் ஆடுவது என்று வீடியோக்களை வெளியிடத் தொடங்கினர். இதனால் இந்த செயலியை அரசு முடக்கியது. அதன் பின்னர் டிக்டாக் பிரபலங்கள் பலரும் instagram, youtube என பல சமூக வலைத்தளங்களில் சேனல்களை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படி வைரலான ஒரு நபராக இருப்பவர் தான் இன்பா. ‘இன்பாஸ் ட்ராக்’ என்கிற ஒரு சேனலை நடத்தி வருகிறார்.

25 வயது மதிக்கத்தக்க இளைஞரான இவர் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து கணவன் மனைவிகளுக்கு இடையே இருக்கும் ஊடல்கள் பற்றியும், முதலிரவு, காதல், காமம் என அனைத்து பற்றியும் தனி ஒருவராக இருந்தே வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்திலிருந்தே இவரது வீடியோக்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது. நாட்கள் செல்ல செல்ல இவரின் வீடியோக்கள் பெண்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. குறிப்பாக ‘மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் கஷ்டங்களை புரிந்து கொள்ளும் ஆண்கள்’ என்ற ரீதியில் இவர் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவருக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சொல்லி பெண்கள் பலரும் கமெண்ட்களில் திட்டி தீர்த்து வந்தனர். ஆனாலும் இன்பாவை பின் தொடரும் பெண்கள் சிலர் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டே வந்தனர்.
சமீபத்தில் இவரை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பேட்டி எடுத்திருந்தது. அதில் இவரின் ஆபாச வீடியோக்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டது. கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத அவர் ஒரு கட்டத்தில் பேட்டியில் இருந்து கோபமாக வெளியேறி இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். நேற்று அவர் வெளியிட்டிருந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோவின் கான்செப்ட் ‘கல்லூரி ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையேயான காதல்’ என்பதுதான்.