“உண்மையான ஆம்பள அப்படி பண்ண மாட்டான்”!!கோபத்தில் பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள ட்வீட்!!யாரை கூறுகிறார் இவர்?

சமீபத்தில் கேரளாவை உலுக்கிய சம்பவம் 22 வயதான திருமணமான பெண் விஷ்மாய, கணவர் கொடுத்த வரதட்சணை கொடுமை தாங்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது. விஷ்மாயவின் கணவர் கொடுத்த வரதட்சணை கொடுமை அந்த இளம் பட்டதாரி பெண்ணிற்கு தற்கொலைக்கு தூண்டி உள்ளது.

"உண்மையான ஆம்பள அப்படி பண்ண மாட்டான்"!!கோபத்தில் பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள ட்வீட்!!யாரை கூறுகிறார் இவர்? 1

விளம்பரம்

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கணவர் கிரண்குமார் தான் குற்றவாளி என முடிவு செய்து உள்ளது. அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 12.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கேரள நீதிபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு பெருமளவு மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. உண்மையில் இது கொலை என்றாலும் அவருக்கு அந்த நிலைக்கு தள்ளியவர் கணவர் கிரண்குமார் தான். ஆகவே இது உண்மையில் கொலையே ஆகும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை இப்பொது ஒட்டுமொத்த கேரளாவும் கொண்டாடி வருகிறது.

விளம்பரம்

பல அரசியல் தலைவர்களும், ஊடகவியாளர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும், பெண்ணியம் பேசுபவர்களும் இந்த தீர்ப்பிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தமிழ் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் ஒரு பதிவினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடையவை  அண்ணாச்சி கெட்டப்பில் வந்து சிவாவை மரணமாக கலாய்த்த அமுதவாணன்..!

"உண்மையான ஆம்பள அப்படி பண்ண மாட்டான்"!!கோபத்தில் பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள ட்வீட்!!யாரை கூறுகிறார் இவர்? 3

விளம்பரம்

அதில், “ஒரு நல்ல ஆம்பளை பெண்ணிடம் வரதட்சணை கேட்க மாட்டான். உங்களை பொருளாகவோ, சொத்தாகவோ கருதும் எந்த நபருடனும் இருந்து ஒதுங்கி இருங்கள்” என பெண்களுக்கு அறிவுரை கூறியும் பதிவிட்டுள்ளார்.

இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் உல்ட்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர். ஏற்கனவே நடந்த ஒரு சீசனிலும் இவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியின் மூலம் இவர் மக்களுக்கு நன்றாகவே அறிமுகம் ஆனர்.

விளம்பரம்

தற்போது தன்னுடைய நடிப்பில் ஆர்வம் செலுத்தி வரும் இவர், விரைவில் ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"உண்மையான ஆம்பள அப்படி பண்ண மாட்டான்"!!கோபத்தில் பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள ட்வீட்!!யாரை கூறுகிறார் இவர்? 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment