
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகையாக தொடர்ந்து நீடித்து வருபவர் நடிகை சமந்தா. சினிமா பின்புலம் கொஞ்சமும் இல்லாமல், தனக்காகவே முயன்று இவ்வளவு பெரிய இடத்தை தானாகவே முயன்று சாதித்துள்ளார். தமிழில் வெளியான மஸ்கொவின் காவேரி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், தெலுங்கில் தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் எடுத்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் அந்த மொழி வேர்ஷனில் நாயகையாக நடித்து இருந்தார்.

முதல் படத்திலேயே தெலுங்கில் முத்திரை பதித்த இவர் தொடர்ந்து அங்கு ஜூனியர் என்.டி.ஆர் நடித்த “பிருந்தாவனம்” படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க, சிலர் இவருடைய சினிமா பயணம் குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி ராஜமௌலின் “நான் ஈ” படத்தில் கதையின் நாயகையாக நடித்து பாராட்டுகளும் விருதுகளையும் வென்று குவித்தார்.

இந்த ஒரே படம் இவரை மிக பெரிய உச்சத்திற்கு இரண்டு மொழி திரையுலகிலும் முக்கிய நாயகியாக மாற்றியது. அடுத்தடுத்து தெலுங்கிலுள்ள முன்னணி நாயகர்கள் பலருடனும் தொடர்ந்து நடித்தார். பவன் கல்யாண், மகேஷ் பாபு, நாகா சைதன்யா, நானி தமிழில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் என அனைவருடனும் நடித்தாலும் அனைத்துமே தேர்ந்தெடுத்து நடித்த கதாபத்திரங்களே.
அறிமுகமான நாக சைதன்யாவுடனே காதல் ஏற்பட பெற்றோர்கள் மத்தியில், மிக பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. 2017ஆம் ஆண்டு நடந்த இந்த திருமணத்தின் மூலம், தெலுங்கு தேசத்தின் உச்ச நாயகியாக மாறிப்போனார். 4 ஆண்டுகள் திருமண வாழ்விற்கு பிறகு திடீரென இருவரும் பிரச்சனையை பற்றி கூறாமல், விவாகரத்து பெற்றனர். இது மிக பெரிய அதிர்ச்சியை சமந்தா ரசிகர்களுக்கு கொடுத்தது.

விவகாரத்திக்கு பின், இவருடைய சினிமா வாழ்க்கை அவ்ளோதான் என பேசிய அனைவர்க்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்தியாவின் நம்பர் 1 தொடரான “தி பேமிலி மேன் 2” தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார். அதற்கு நடுவில், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரே பாடலுக்கு நடனம் ஆடி, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார்.

இப்பொது இவர் விஜய் தேவரைக்கொண்டவுடன் ஒரு படம், ஆங்கிலத்தில் வெப் தொடர் ஒன்று, ஹிந்தி வெப் தொடர் ஒன்று என பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடரப்படும் இந்திய நாயகிகளில் இவர் முன்னனியில் இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தியும், தனியார் பொருட்டுகளை விளம்பரம் செய்தும் பதிவிட்டு வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையை தவிர்த்து படங்களில் மட்டுமே இப்போது மிக அதிகமாக கவனம் செலுத்தி வரும் சமந்தாவிற்கு எதிர்மறையாக இருக்கிறார் நாகசைதன்யா. படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர் அண்மையில் சாய் பல்லவியுடன் “லவ் ஸ்டோரி” என்ற படத்தில் நடித்து இருந்தார். இதற்கு அடுத்தப்படியாக இவர் ஹிந்தியில் நடிகர் அமீர் கானின் “லால் சிங் சாத்தா” படத்தில் நடித்துள்ளார்.

இப்பொது இவர் நடித்து வரும் படம் “Thank you”. இந்த படத்தில் இவருடன் ராஷி கண்ணா, மாளவிகா நாயர், அவிக்க கோர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற ஜூன் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷனுக்காக நாகா சைதன்யா தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் #Thankyou என கூறி தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் தன்னுடைய வளர்ப்பு நாய் ஹாஷ் என 3 புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இதில் அந்த நாயுடன் இருக்கும் போஸ்டர் தான் இப்பொது மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அது நடிகை சமந்தாவின் நாயாகும். அவரின் வளர்ப்பில் தான் இப்பொது விவாகரத்திற்கு பிறகு அந்த நாய் உள்ளது. இதனால் அம்மா, அப்பா அடுத்து தன்னுடைய காதல் மனைவி சமந்தாவிற்கு பதிலாக அவருடைய நாய் புகைப்படம் போட்டு மறைமுகமாக சமந்தாவை தான் அவர் பேசுகிறார் என பலரும் கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
