கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா.! வளைகாப்பு புகைப்படங்கள் இதோ.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா என்னும் தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ஸ்வேதா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எளிமையான முறையில் வளைகாப்பு நடைபெற்றிருக்கிறது. அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா.! வளைகாப்பு புகைப்படங்கள் இதோ.! 1

பல ஆண்டுகளாக நெடுந்தொடர்களுக்கு பெயர் போன ஒரு டிவியாக இருந்து வருகிறது சன் தொலைக்காட்சி. அந்த வகையில் எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த ஒரு தொடர் தான் சந்திரலேகா. இதில் எட்டு ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் ஸ்வேதா பண்டேகர்.


ஸ்வேதா ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு தல அஜித்குமார் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார்.

பின்னர் பூவா தலையா, மீராவுடன் கிருஷ்ணன், நான் தான் பாலா, பூலோகம், வள்ளுவனும் வாசுகி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு தொடர் என்று சொன்னால் அது சந்திரலேகா தான்.


சந்திரலேகாவிற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான மகள் என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கு பின்னர் சந்திரலேகா சீரியல் மூலமாக மக்களிடையே பிரபலமானார் ஸ்வேதா. இந்த சீரியலில் சந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் தற்போது நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.


ஸ்வேதாவிற்கு 37 வயதான நிலையில் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கும் சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்த மால் மருகா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருந்தது. திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் முடிந்திருக்கும் நிலையில் தற்போது ஸ்வேதா கர்ப்பமாகி இருக்கிறார்.


இந்த நிலையில் ஸ்வேதாவிற்கு தற்போது எளிமையாக வளைகாப்பு நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் சிவன் பார்வதி போல வேடமணிந்து அவர்கள் கர்ப்பகால போட்டோ சூட்டையும் நடத்தி இருக்கின்றனர். அந்த வீடியோவையும் ஸ்வேதா பகிர்ந்திருக்கிறார். பலரும் ஸ்வேதாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்