சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சித்தா் இந்த படத்தை எஸ்.யூ. அருண்குமார் இயக்கியிருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை பார்த்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை கூறியிருக்கிறார். அதில் அண்ணன், மனைவி, அண்ணன் மகள் மற்றும் சித்தார்த் ஆகியோர் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். பின்னர் அண்ணன் இறந்து விட அண்ணன் மகளின் மீது மிகுந்த பாசத்துடன் சித்தார்த் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அவரது நண்பரின் குழந்தைக்கு ஒரு பாலியல் வன்கொடுமை ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்தப் பழி ஹீரோ மீது விழுகிறது. அந்த பழியிலிருந்து மீண்டு வர ஹீரோ என்ன செய்தார்? அதன் பின்னர் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இந்த படம் குறித்து விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன் படத்தில் எதையுமே ஆழமாக காண்பிக்காமல் மேம்போக்காகவே காண்பித்திருக்கிறார்கள். குழந்தையின் தாய் தந்தையினருக்கு இடையே இருக்கும் பிளாஷ்பேக்கை மேம்போக்காக சொல்லி இருக்கிறார்கள். அதேபோல காதலிக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் விஷயங்களையும் பெரிய அளவில் காட்டவில்லை. அனைத்தையும் மேம்போக்காக சொல்லி இருக்கிறார்கள். இது படத்திற்கு பிளஸ் ஆகவும் மைனஸ் ஆகவும் அமைந்திருப்பதாக கூறினார்.
மேலும் வீட்டில் குழந்தை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் குழந்தையை அழைத்துச் சென்று இந்த படத்தை பார்க்க வைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் அந்த விமர்சன வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies