நடிகர் சித்தார்த் நடித்து வரும் ‘சித்தா’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. மகளுக்காக ஏங்கும் தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. 2003ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். பின்னர் பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவர் கடைசியாக நடித்த ‘டக்கர்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்துவரும் சித்தார்த்திற்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்த போதிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை சித்தார்த் தயாரித்திருக்கிறார்.
படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது சித்தார்த் ஒரு குழந்தையின் சித்தப்பாவாக இருப்பது போல தெரிகிறது. குழந்தைக்கு நடந்த ஆபத்தினால் அவரைத் தேடி அலைவது போல காட்டப்பட்டுள்ளது. படம் வருகிற செப்.28ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Think Music India