தம்பிகளை நோக்கி நடந்து வந்த ஆதி குணசேகரன்.! எதிர்பாராத திருப்பம்.! வெளியான ப்ரோமோ இதோ.!

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் புது ஆதி குணசேகரனை அறிமுகப்படுத்தி இந்த ப்ரோமோவை சீரியல் குழுவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே சீரியல் குழுவினர் கொடுத்துள்ளனர். எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மாரிமுத்து. ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமாகி இருந்தார். இவரது மரணம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி இருந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்த போதிலும் எதிர்நீச்சல் சீரியல்தான் மாரிமுத்துவிற்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தம்பிகளை நோக்கி நடந்து வந்த ஆதி குணசேகரன்.! எதிர்பாராத திருப்பம்.! வெளியான ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

ஆனால் 500 எபிசோடுகளை மட்டுமே தாண்டிய நிலையில் அவர் காலமாகியிருந்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கதையையும் வேறு களத்திற்கு இயக்குனர் மாற்றி இருந்தார். வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்து மனமுடைந்த ஆதி குணசேகரன் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டதாகவும், அவரைத் தேடி அவரது தம்பிகள் அலைந்து கொண்டிருப்பது போலவும் கதைக்களம் நகர்கிறது. மேலும் ஆதி குணசேகரனுக்கு அண்ணன் ஒருவர் இருப்பது போலவும் கதை நகர்ந்ததால் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை முடித்துவிட்டு அவரது அண்ணன் கதாபாத்திரத்தை இயக்குனர் தொடர இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

தொடர்புடையவை  காதலனை பிறந்துவிட்டதாக பரவிய வதந்தி.! ஜோடியாக வந்து முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி ஷங்கர்.!

தம்பிகளை நோக்கி நடந்து வந்த ஆதி குணசேகரன்.! எதிர்பாராத திருப்பம்.! வெளியான ப்ரோமோ இதோ.! 3
இந்த நிலையில் நேற்று கதிர் மற்றும் ஞானம் இருவரும் அண்ணனை தேடி ஒரு ஊருக்கு செல்கின்றனர். அங்கு சாமியார் ஒருவர் அவர்களை ஒரு கோயிலில் அமர வைத்து விட்டு ஆதி குணசேகரனை அழைத்து வருவதாக கூறி செல்கிறார். அப்போது ஆதி குணசேகரன் காரில் வந்து இறங்குகிறார். இன்று ஆதி குணசேகரனை அறிமுகப்படுத்தி விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment