வேதாவுடன் திருமணத்தை முடித்த விக்ரம்.! விக்ரம் வேதாவின் திருமண வைபோகம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் தற்போது விக்ரமுக்கும் வேதாவுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. குழந்தை நல மருத்துவராக இருக்கும் வேதாவுக்கும் அவரது எதிர் வீட்டில் வசித்து வரும் விக்ரமுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. ஆனால் விக்ரமின் மகள் தன்வியும் வேதாவும் நெருங்கி பழகியதால் விக்ரமுக்கு வேதாவை திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் முடிவெடுத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேதாவுடன் திருமணத்தை முடித்த விக்ரம்.! விக்ரம் வேதாவின் திருமண வைபோகம்.! 1
விக்ரம் ஏற்கனவே திருமணம் ஆகி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தனது மகளை தன்னுடன் அனுப்புமாறு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தார். அப்போது இறுதி தீர்ப்புக்கு முன்பு விக்ரமுக்கு திருமணம் நடந்தால் மகளை அவரிடமே ஒப்படைப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. அப்போது வேதாவுடன் கோர்ட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டிருந்தார் விக்ரம். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். இருவர் வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  ஆல்யா மானஸாவின் மகன் அர்ஷின் முதல் பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்

வேதாவுடன் திருமணத்தை முடித்த விக்ரம்.! விக்ரம் வேதாவின் திருமண வைபோகம்.! 3
அந்த வீடியோவை ப்ரோமோவாக தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பலரும் அந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment