குடியுரிமை மசோதா: போராட்டக்களமாக மாறும் அசாம்!

இன்று பாராளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அசாமில் போராட்டம் வெடித்துள்ளது. இதில், மாணவர்கள், பொது மக்கள், அரசியல் கட்சிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய குழுக்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

தற்போது குடியுரிமை சட்டத்தை தாக்கல் செய்ய இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1985ஆம் அசாம் மாநிலத்தோடு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு முற்றிலும் எதிரானதாக இருப்பதால், அங்கு மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி வங்களாதேசம் தனிநாடாக சுதந்திரம் பெற்றபோது, அங்கிருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற சமூகங்களுக்கு குடியுரிமை வழங்கும் போது, முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிமை மறுக்கப்படுகிறது.

விளம்பரம்
குடியுரிமை மசோதா: போராட்டக்களமாக மாறும் அசாம்! 1

இதன் காரணமாக டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மசோதாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிடும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மோடி, அமித் ஷா, அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரின் உருவ பொம்மைகளுக்கு தீயிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போராட்டத்தில் மாநில மக்கள் பெரும்பான்மையாக குடியிருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment