ஏ.ஆர்.ரகுமான் குரலில் கோப்ரா படத்தின் அடுத்த பாடல் வெளியானது..பாடல் கேட்கும் போது உண்மையில் உயிர் உருகுதே

ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவரே பாடி உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தும்பி துள்ளல் மற்றும் ஆதிரா என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேக்பை பெற்று இருந்த நிலையில் தற்போது மூன்றாவது பாடலும் வைரலாகி வருகிறது. விக்ரம் நடிப்பில் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லலித் குமார் என்பவர் தயாரித்து வரும் படம்தான் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கேஜிஎஃப் பட ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஏ.ஆர்.ரகுமான் குரலில் கோப்ரா படத்தின் அடுத்த பாடல் வெளியானது..பாடல் கேட்கும் போது உண்மையில் உயிர் உருகுதே 1

விளம்பரம்

கோப்ரா படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஷூட்டிங் தொடங்கப்பட்டது. சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக படத்தை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வந்தது. இந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதனால் படத்திற்க்கான ப்ரோமஷன் வேலைகளை செய்து வருகின்றனர் படக்குழு. அதன் முதல் வேலையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மூன்றாவது பாடலாக உயிர் உருகுதே என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை கவிஞர் மற்றும் பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார்.

தொடர்புடையவை  அதர்வாவுடன் கை கோர்த்த குட் நைட் மணிகண்டன்.! மத்தகம் ட்ரைலர் வெளியானது.!

ஏ.ஆர்.ரகுமான் குரலில் கோப்ரா படத்தின் அடுத்த பாடல் வெளியானது..பாடல் கேட்கும் போது உண்மையில் உயிர் உருகுதே 3

விளம்பரம்

ஏற்கனவே இரண்டு பாடல்களும், டீசரும் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில் இந்த பாடலும் வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. அந்த பாடலை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube video Code embed credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment