மீண்டும் தனக்கு பாகற்காய் வந்ததால் நான் இந்த நிகழ்ச்சியில் சமைக்கப் போவதில்லை என்று சிவாங்கி கூறுகிறார். அதற்கு கோபமாக தாமு சிவாங்கியை திட்டுகிறார். 15-வது வாரம் வந்துவிட்டது. இப்போது வந்துவிட்டு நான் சமைக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? என்று சிவாங்கியிடம் கோபமாக கேட்கிறார். இதனால் பதில் சொல்ல முடியாமல் சிவாங்கி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது பரபரப்பான கட்டங்களை நடுவர்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் கடந்த மூன்று சீசன்களில் இருந்த குக்குகளை இந்ம சீசனில் இருக்கும் குக்குகளுடன் மோதவிட்டு இருக்கின்றனர். பழைய சீசன்களில் இருந்த குக்குகள் நன்றாக சமைத்து இம்யூனிட்டியை வென்றார்கள் என்றால், தற்போது இருக்கும் ஆறு குக்குகளும் அடுத்த எலிமினேஷன் ரவுண்டுக்கு நேரடியாக தகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த வாரம் சீசன் நான்கின் குக்குகள் யாருமே இம்யூனிட்டி பேண்டை கைப்பற்றாத நிலையில் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு ஆறு பேரும் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்பதுதான் அதன் பொருள். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியானது. அதில் மூன்று கலர் சேலஞ்ச் என்று சொல்லப்படும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. மூன்று கலர் சேலஞ்சில் கடந்த சீசன்களில் எலிமினேஷன் கூட நடந்துள்ளது. மதுரை முத்து தனக்கு வந்த வெள்ளை கலரில் மஞ்சள் தூளை போட்டு மஞ்சள் கலராக மாற்றிவிட்டார். அந்த எபிசோடில் அவர் எலிமினேட்டும் ஆகியிருந்தார். எனவே இது ஒரு முக்கியமான டாஸ்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்க்கப்படுகிறது. அந்த டாஸ்க் தற்போது வைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சிவாங்கிக்கு மீண்டும் பாகற்காய் வந்திருக்கிறது கடந்த வாரம் அவருக்கு பாகற்காயை கொடுத்து மைம் கோபி இனிப்பு ஒன்றை செய்ய சொல்லி அட்வான்டேஜை பயன்படுத்தி இருந்தார்.
ஆனால் சிவாங்கியால் பாகற்காயை வைத்து இனிப்பை சரியாக செய்ய முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் இன்று அவருக்கு பாகற்காயை வந்துள்ளது. இதை பார்த்து சிவாங்கி நான் சமைக்கப் போவதில்லை இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூற அதற்கு செஃப் தாமு கோபம் ஆகிறார். பதினைந்தாவது வாரத்தில் வந்து நின்று கொண்டு இது போல் சொல்வது சரியாக இருக்கிறதா என்று சொல்லி கோபத்துடன் கேட்கிறார். இது ஒரு போட்டி எதைக் கொடுத்தாலும் சமைக்க வேண்டும் என்றும் காட்டமாக கூறுகிறார். இதனால் சிவாங்கி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television