குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக்திக்கு தற்போது கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் அவர் வாங்கிய புது கார் தற்போது சுக்கு நூறாக உடைந்திருக்கிறது. அந்த செய்தியை தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சக்தியே அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் சக்தி. ஆரம்பத்தில் டிக் டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு பல ரசிகைகளை பெற்றிருக்கும் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவர் பெரிதும் அறியப்படாதவராக இருந்தார். தன் முகம் கூட அடிக்கடி காட்டப்படுவதில்லை என்று அவர் இந்த நிகழ்ச்சியிலேயே அடிக்கடி பேசி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அடிக்கடி சக்திக்கு கோமாளியாகும் வாய்ப்பு கிடைக்கிறது. சீசன் 2வில் கோமாளியாக வந்த இவர் சீசன் 3, சீசன் 4 என அனைத்து சீசன்களிலும் யாராவது வரவில்லை என்றாலோ செலிப்ரேஷன் ரவுண்டு என்றாலோ கோமாளியாக வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கிறார். youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அண்மையில் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார் சக்தி. குக் வித் கோமாளி பிரபலம் புகழுடன் சென்று அந்த காரை அவர் வாங்கி இருந்தார். ஆறு மாதம் கூட நிறைவடையாத நிலையில் தற்போது அவர் சென்ற கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. சக்தி காரை ஓட்டிச் சென்றபோது ஒரு பேருந்து காரை உரசிபடி வந்து காரை இடித்திருக்கிறது.
இதனால் சக்திக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் மருத்துவமனை செல்லும் அளவிற்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. எனினும் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார். இருப்பினும் பேருந்து இடித்த காரணத்தினால் கார் மிகப்பெரிய அளவில் சேதாரம் ஆகியிருக்கிறது. அதையும் அந்த வீடியோவில் சக்தி காட்டி இருக்கிறார். தற்போது பலரும் சக்திக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தனது சொந்த உழைப்பினால் புதிய கார் வாங்கி ஆறு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது அவரது கார் விபத்துக்குள்ளாகி சுக்கு நூறாகி இருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சக்தி வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Mic On