சின்னத்திரைகளிலும் ஒளிபரப்பாகும் நிறைய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலானவை விஜய் டீவியை சேர்ந்ததே. நீயா நானா, பிக் பாஸ், பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர், சுஐப்ர் சிங்கர் ஜூனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.சமையல் போட்டி என்றாலும் இதில் மிகவும் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் கோமாளிகளாக வந்து செய்யும் சேட்டைகளை தான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. விஜய் டிவியின் பல மைல்கால் நிகழ்வுகளில் இந்த நிகழ்ச்சியை துவங்கியதும் இவர்களுடைய மிக முக்கிய வெற்றியே. குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம்.
இந்த போட்டியின் இறுதி சுற்று நெருங்கி வரும் வேலையில் சென்ற வாரமே நடிகை ஸ்ருத்திகா முதல் இறுதி போட்டியாளராக தேர்வாகினார். நேற்று நடைபெற்ற போட்டிகளில் முறையே அம்மு அபிராமி இரண்டாவது பைனலிஸ்ட்டாக தேர்வாக மூன்றாவது நபராக வித்யூலேகா தேர்வானார்.
அதற்கடுத்து வேட்டை முத்துக்குமார் மற்றும் தர்ஷன் இடையே இறுதி சுற்று நடைபெற்றது. அதில் இருந்து ஒருவர் பைனலுக்கு செல்வார், இன்னொருவர் எலிமினேட் ஆவர் என அறிவிக்கப்பட்டது. அவர்கள் சாக்லேட் வைத்து டிஷ் செய்யவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பாக செய்த தர்ஷன் பைனலுக்கு முன்னேறினார், முத்துக்குமார் எலிமினேட்டாகி போட்டியிலிருந்து வெளியேறினார்.