ஜாங்கிரி மதுமிதாவாக மாறிய பரத், சந்தானமாக மாறிய குரேஷி.! இந்த வாரம் செம்ம அலப்பறை இருக்கு

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. மூன்று சீசன்களை முடித்திருக்கும் குக் வித் கோமாளி தற்போது நான்காவது சீசனையும் விரைவில் முடிக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் செமி பைனல்ஸ் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செமி பைனல்ஸில் மைம் கோபி, சிவாங்கி, சிருஷ்டி, கிரண் என மொத்தம் நான்கு போட்டியாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த பிக்பாஸ் வெர்சஸ் குக் வித் கோமாளியில் விசித்ரா வெற்றி பெற்று முதல் பைனலிஸ்ட்டாக தேர்வாகி இருக்கும் நிலையில், தற்போது மீதமுள்ள நான்கு பேருக்கு இடையே போட்டி கடுமையாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில் முதல் ப்ரோமோ வெளியான போது சில கடுமையான உணவுகளை சமைக்க சொல்லி குக்குகளுக்கு நடுவர் செஃப் தாமு அறிவுறுத்துகிறார். இதனால் ஒவ்வொரு குக்குகளும் பயத்தில் உறைந்து போயிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாங்கிரி மதுமிதாவாக மாறிய பரத், சந்தானமாக மாறிய குரேஷி.! இந்த வாரம் செம்ம அலப்பறை இருக்கு 1

குறிப்பாக மீன் முட்டை, தேயிலை, கூனைப்பூ, சுண்டைக்காய், கல்லீரல் என்று சொல்லி சமைக்க மிகவும் கடுமையான உணவுகளை நடுவர்கள் கொடுத்திருக்கின்றனர். இந்த உணவுகளை யார் நன்றாக சமைக்கிறார்களோ அவர்களே இறுதியில் இரண்டாவது பைனலிஸ்ட்டாக வெற்றி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த உணவுகளை பார்த்த குக்குகள் தற்போது அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். பலருக்கும் இந்த உணவுகளை எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக சிவாங்கி கல்லீரலை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். மேலும் நீங்கள் எடுக்கும் உணவுகளை உங்களுக்கு கடினமான போட்டியாளர் என்று நினைப்பவர்களிடம் மாற்றி கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஒவ்வொரு குக்களுக்கும் இரண்டு கோமாளிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஜி பி முத்து, சுனிதா இருவரும் மைம் கோபிக்கு கோமாளியாகவும், தங்கதுரை மோனிஷா சிருஷ்டிக்கு கோமாளியாகவும், கிரணுக்கு குரேஷி மற்றும் பரத் ஆகிய இருவரும் கோமாளியாகவும், சிவாங்கிக்கு புகழ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகிய இருவரும் கோமாளிகளாக வந்துள்ளனர். எனவே இந்த வாரமும் காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமாவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்