ஷாக் அடித்து கீழே விழுந்த கண்ணம்மா.! பாசத்தில் எழுந்து நடக்க முயற்சிக்கும் கண்ணம்மாவின் அம்மா.!

பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இது பலருக்கும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கண்ணம்மாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தீபா ஷங்கர் தற்போது தனது சிறந்த நடிப்பால் பலரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வந்தது பாரதி கண்ணம்மா தொடர் தான். இந்தத் தொடரில் பாரதியாக அருண் பிரசாத் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். ஆரம்பத்தில் இந்த நாடகத்தில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வந்தார். பின்னர் அவர் இந்த சீரியலில் இருந்து விலகிய பின்னர் வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வந்தார். பல ஆண்டுகளாக ஒளிபரப்பான இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என்கிற செய்தி பரவியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாக் அடித்து கீழே விழுந்த கண்ணம்மா.! பாசத்தில் எழுந்து நடக்க முயற்சிக்கும் கண்ணம்மாவின் அம்மா.! 1
ஆனால் முதல் சீசன் முடிந்த ஒரு வாரத்திலேயே இரண்டாவது சீசன் ஒளிபரப்பு தொடங்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சீரியலின் கதாநாயகனாக சன் டிவியில் ரோஜா சீரியல் நடித்து வந்த சிபு சூரியன் பாரதியாக நடிக்க, கண்ணம்மாவாக வினுஷா தேவியை தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் வெண்பாவாக ஃபரீனாவும், சௌந்தர்யாவாக ரூபா ஸ்ரீயும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். சீசன் 1க்கு கிடைத்த வரவேற்பு விழாவிற்கு கூட சீசன் 2 விற்கு கிடைக்கவில்லை. பலரும் இந்த நாடகத்தை பார்ப்பதாக தெரியவில்லை. மேலும் ப்ரைம் டைமான ஒன்பது மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இதனால் பல நல்ல தொடர்கிறது கூட பார்வையாளர்கள் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் அதிரடியாக விஜய் டிவி பாரதிகண்ணம்மா சீரியலின் நேரத்தை மாற்றி அமைத்தது. இரவு 10 மணிக்கு இந்த சீரியலின் நேரத்தை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தனர். இருந்த போதிலும் இந்த சீரியலை சிலர் விரும்பி பார்த்து வருவதாகவே தெரிகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  என்னை என்ன சொல்லி இருந்தாலும் தாங்கி இருப்பேன்..ஆனா, ஸ்ரீநிதி பற்றி மனம் திறந்து பேசிய நக்ஷத்ரா

ஷாக் அடித்து கீழே விழுந்த கண்ணம்மா.! பாசத்தில் எழுந்து நடக்க முயற்சிக்கும் கண்ணம்மாவின் அம்மா.! 3

 

விளம்பரம்

தற்போது கதைப்படி வினுஷா தேவி சித்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் கண்ணம்மா என்கிற பெண் இறந்ததால் அவரது வீட்டில் கண்ணம்மாவாக மாறி என்ட்ரி கொடுத்திருந்தார் சித்ரா. இதில் கண்ணம்மாவின் அம்மாவாக வரும் தீபா ஷங்கருக்கு கால் எழுந்து நடக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதை தெரிந்து கொண்டு பாரதி தற்போது கண்ணம்மாவிற்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். மேலிருந்து ஷாக் அடித்து கீழே விழும்படி செய்தால் அவர் பாசத்தினால் எழுந்து நடந்து வருவார் என்று ஐடியா கொடுக்க, அதுபோலவே கண்ணம்மாவும் ஒரு சேரில் ஏறி ஃபேனை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஷாக் அடித்து கீழே விழுவது போல் நடிக்கிறார் இதனால் நடக்க முடியாமல் இருந்த தீபாசங்கர் தற்போது எழுந்து நடந்து வருகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment