விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரம் அரையிறுதி சுற்று நடைபெற இருக்கிறது. இதில் யார் வெற்றி பெற்று இரண்டாவது பைனலிஸ்ட் ஆக தேர்வாக இருக்கிறார்கள் என்பது குறித்த பரபரப்பு தற்போது எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தற்போது இது மூன்று சீசன்களை முடித்து நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. வழக்கம் போல இந்த சீசனும் 10 குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இடையில் இரண்டு வைல்ட் கார்டு என்ட்ரி என மொத்தம் 12 பேர் இந்த போட்டியில் பங்கெடுத்தனர். தற்போது வரை ஏழு பேர் எலிமினேட் செய்யப்பட்டு இறுதியாக ஐந்து பேர் டாப் 5-ல் வந்திருக்கின்றனர். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வெர்சஸ் குக் வித் கோமாளி என்று இரண்டு அணிகளாக பிரிந்து சமைத்தனர். அப்போது விசித்திராவும் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு டீமாக சமைத்தனர். இதில் விசித்திரா வெற்றி பெற்று முதல் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது ஃபைனலிஸ்ட்டை தேர்ந்தெடுப்பதற்காக செமி பைனல்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சிவாங்கி, கிரண், மைம் கோபி, ஸ்ருஷ்டி என நான்கு பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நான்கு பேரில் இருந்து ஒருவர் இரண்டாவது ஃபைனலிஸ்டாக தேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசன்களில் மொத்தம் ஐந்து அல்லது ஆறு பேருடன் இறுதிப்போட்டி நடைபெற்றது. அது போல் இந்த முறையும் 5 பேருடன் இறுதிப் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்க்குகள் கடுமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
மீன் முட்டை, தேயிலை, சுண்டைக்காய், கூனைப்பூ, ஆட்டுக் கல்லீரல் என்று கடினமான உணவுகளைக் கொண்டு சமைக்கும் டாஸ்குகளை தற்போது நடுவர்கள் குக்குகளுக்கு கொடுத்து இருக்கின்றனர். இந்த வாரம் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மொத்தம் மூன்று தடைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தடையை வைத்து கொண்டு சமைப்பதே கடினம். ஆனால் மூன்றை வைத்துக் கொண்டு குக்குகள் எவ்வாறு சமைக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. கோமாளிகள் காதில் ஹெட்போன் மாட்டப்பட்டிருக்கிறது. மேலும் இரண்டு கோமாளிகளுக்கும் இரண்டு குடைகளை பிடித்துக் கொண்டு குக்குகள் நிற்கிறார்கள் மேலும் கையில் கிளவுஸ் போட்டு கொண்டு சமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television