லட்டு செய்ய சொன்ன நடுவர்கள்.! பூந்தியே செய்ய தெரியாமல் முழித்து கொண்டிருக்கும் மதுரை முத்து.!

வெளியிட்டது

தமிழக மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் சீசன் 2வில் குக்குகளாக இருந்த ஷகிலா, மதுரை முத்து, தீபா சங்கர், தர்ஷா குப்தா, ரித்திகா ஆகியோர் தற்போது சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் சேர்த்து மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் பாலாவும் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கிறார். இதனால் இந்த வாரம் காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லட்டு செய்ய சொன்ன நடுவர்கள்.! பூந்தியே செய்ய தெரியாமல் முழித்து கொண்டிருக்கும் மதுரை முத்து.! 1
இந்த வாரம் நடக்கும் அட்வான்டேஜ் டாஸ்க்கில் லட்டு செய்ய சொல்லி தற்போது நடுவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். கடலைமாவை கொடுத்து பின்பு அதை பூந்தியாக போட்டு பின்னர் சர்க்கரை பாகு போட்டு பூந்திகளை லட்டுகளாக உருட்டி எடுத்து வர வேண்டும் என்று தற்போது நடுவர்கள் டாஸ்க் கொடுத்திருக்கின்றனர். அப்போது மதுரை முத்து பூந்தியை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஷகிலா கடலை மாவை வைத்து தான் பூந்தியே செய்ய வேண்டும், பின்னால் லட்டு செய்ய வேண்டும் என்று காமெடியாக கூறிக் கொண்டிருக்கிறார். மேலும் புகழ் ஷகிலாவின் கழுத்தை பிடித்து வாய்ஸை எப்படி மாற்றுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வரும் வெங்கடேஷ் பட் என்ன தைரியம் இருந்தால் நீ சகிலாவின் கழுத்தை பிடிப்பாய் என்று கேட்க அதற்கு காமெடியாக என் தாயின் கழுத்தை நான் பிடிக்க கூடாதா என்று புகழ் சொல்ல உடனே பட் புகழை சப்பாத்திக்கட்டையால் அடிக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது..! நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்