“மேடம் உங்க கூட சேர்ந்த எனக்கு பெயரே spoil ஆகுது..சும்மா போங்க அப்படி..பங்கம் பண்ணும் பாலா”!!

வெளியிட்டது

சின்னத்திரைகளிலும் ஒளிபரப்பாகும் நிறைய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலானவை விஜய் டீவியை சேர்ந்ததே. நீயா நானா, பிக் பாஸ், பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர், சுஐப்ர் சிங்கர் ஜூனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.சமையல் போட்டி என்றாலும் இதில் மிகவும் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் கோமாளிகளாக வந்து செய்யும் சேட்டைகளை தான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

"மேடம் உங்க கூட சேர்ந்த எனக்கு பெயரே spoil ஆகுது..சும்மா போங்க அப்படி..பங்கம் பண்ணும் பாலா"!! 1

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. விஜய் டிவியின் பல மைல்கால் நிகழ்வுகளில் இந்த நிகழ்ச்சியை துவங்கியதும் இவர்களுடைய மிக முக்கிய வெற்றியே. குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம்.

இறுதி சுற்றிற்கு முன்பாக அந்த சுற்றிற்கு தகுதி பெற வேண்டி நடத்தப்படும் Wild Card சுற்றில் நடைபெற்ற போட்டியில் முன்னர் வெளியேறிய போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். மனோபாலா மற்றும் அந்தோணி தாசன் சில காரணங்களால் இந்த போட்டியில் பங்கெடுக்கவில்லை. இதில் இறுதி போட்டிக்கு பங்கெடுத்த ஸ்ருதிகா, விதியுலேகா, அம்மு அபிராமி மற்றும் தர்ஷன் சும்மா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த போட்டியில் இருந்து இறுதி சுற்றிற்கு கடைசியில் கிரேஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப்  ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறினர். கலகலப்பாக சென்ற இந்த நிகழ்ச்சியின் வீடியோ இப்பொது விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சும்மா சுற்றி வரும் விதியுலேகாவை மேடம் வாங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என பாலா கூப்பிட. “போடா உன்னால என்னோட ட்ரேஸ்லாம் spoil ஆகுது” என விதியுலேகா கூற, “மடடம உங்களுக்காவது டிரஸ் தான் உங்ககூட சேர்ந்து எனக்கு Name spoil என கூறி பாலா கவுண்டர் அடித்தார்.

வரும் வாரத்தில் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. ரசிகர்கள் பலரும் யார் இந்த போட்டியில் வெற்றி பெற்றார்கள் என பார்க்க மிகவும் ஆர்வமாக காத்துள்ளனர்.அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy – Vijay Television.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்