“ஏற்கனவே போகுது மானம்..இதுல கேக்குதா தானம்”!! ஷகீலாவை பங்கமாக கலாய்த்த பாலா!! சிறப்பு போட்டியாளராக மீண்டும் வந்துள்ள ஷகீலா

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய டஸ்க்கை கொடுத்து அதில் சொதப்புவர்களை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். உண்மையில் சமையல் போட்டியான இதில், பலரும் இதில் வரும் காமெடி காட்சிக்காகவே பார்த்து வருகிறாரகள்.

"ஏற்கனவே போகுது மானம்..இதுல கேக்குதா தானம்"!! ஷகீலாவை பங்கமாக கலாய்த்த பாலா!! சிறப்பு போட்டியாளராக மீண்டும் வந்துள்ள ஷகீலா 1

இந்த நிகழ்ச்சியில், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஸ்ருதிகா, அந்தோணி தாசன், மனோபாலா, ரோஷினி, சந்தோஷ், விடியுலேகா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த் மற்றும் வைல்ட் கார்டு நுழைப்பாக முத்து ஆகியோர் பங்கெடுத்து உள்ளார். இதில், மனோபாலா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், அந்தோணி தாசன், ரோஷினி ஹரிப்ரியன் ஆகியோர் முறையே வெளியேற்றப்பட்டனர்.

நடிகை ஷகீலாவிற்கு அறிமுகம் தேவையில்லை. 1990களில் மிகவும் பிரபலமான நடிகையாக தென்னிந்தியாவில் வளம் வந்தார். மலையாளத்தில் குறிப்பாக இவருடைய ஆபாச படங்களுக்கு மிக பெரிய வரவேற்பு இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக இப்படியான வேலைகளில் செய்து வந்த நடிகர் ஷகீலா. சில ஆண்டுகள் முன்பு அவ்வாறான படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முக்கிய சினிமாக்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரை இரண்டாவது சீசனில் களமிறங்கியது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே இவர் மேல் இருந்த தவறான எண்ணங்கள் மாறி மக்களுக்கு இவர் மேல் நல்ல அபிப்ராயயமும், முன்னர் இருந்தததை விட நிறைய ரசிகர் கூட்டமும், முன்னர் இவர் சந்தித்த சம்பவங்கள் மக்களை சோகத்திலும் ஆழ்த்தியது. இருப்பினும் சீசன் 2’வில் இவரே மக்களின் மனம் கவர்ந்த மிக முக்கிய போட்டியாளர். வென்றது கனியாக இருந்தாலும் மக்களின் பிடித்தமான போட்டியாளராக மாறிப்போனார் ஷகீலா.

இப்பொது இவர் ஒளிபரப்பாகி வரும் சீசன் 3’இல் இவர் சிறப்பு போட்டியாளராக இந்த வாரம் களமிறங்கியுள்ளார். அந்த ப்ரோமோவை விஜய் டிவி நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், பாலா இவரை வெகுவாக கலாய்த்து தள்ளியுள்ளார். ” ஏற்கனவே நமக்கு போகுது மானம், இதுல பின்னால உங்கள தனம் தேவையா” என பழைய பேட்டி ஒன்றில் நடிகை ஷகீலா செய்ததை பாலா கலாய்த்து பேசியுள்ளார்.

இந்த வாரம் மீண்டும் ஷகீலா வந்துள்ளதால் ரசிகர் ஆர்வமாக அந்த எபிசொட்டிற்காக காத்துள்ளனர். பாலாவும், ஷகிலாவும் சென்ற சீசனில் செய்த காமெடி மிகவும் ரசிகர்களை கவர்ந்ததால், இந்த வாரமும் அதற்கு எந்த விதத்திலும் குறைவு இன்றி, எபிசொட் நகரும் என எதிர்பார்க்கலாம். அந்த வீடியோ நீங்களும் காண….

Video Courtesy – VijayTelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்