கடைசி இடத்தில் நின்று இருந்த சிவாங்கி, ஷெரின், ஸ்ருஷ்டி..! இந்தவாரம் வெளியேறப் போவது யாரு..?

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்று பேர் எலிமினேஷனில் நின்று இருக்கின்றனர். சிவாங்கி ஷெரின் சிருஷ்டி என மூன்று பேர் எலிமினேஷன் ரவுண்டுக்கு வந்துள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே இழந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது மூன்று சீசன்களை முடித்து நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனில் மதுரை காளையன், ராஜ் ஐயப்பா, இயக்குனர் கிஷோர், விஜே விஷால், மைம் கோபி, விசித்ரா, ஆண்ட்ரியன், சிவாங்கி, சிருஷ்டி, ஷெரின் என பத்து பேர் குக்குகளாக வந்தனர். இதில் மதுரைக் காளையன், ராஜ் ஐயப்பா, இயக்குனர் கிஷோர், விஜே விஷால் என்று நான்கு ஆண் போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது ஆறு போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசி இடத்தில் நின்று இருந்த சிவாங்கி, ஷெரின், ஸ்ருஷ்டி..! இந்தவாரம் வெளியேறப் போவது யாரு..? 1
மேலும் பழைய கோமாளிகளாக இருந்த சுனிதா, புகழ், குரேஷி ஆகியோர் மட்டுமே இந்த முறை பங்கு பெற்றுள்ளனர். சிவாங்கி குக்காக மாறிய காரணத்தால் அவரால் இந்த முறை கோமாளியாக பங்கேற்க முடியவில்லை. மேலும் மணிமேகலை ஆரம்பத்தில் கோமாளியாக வந்திருந்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகியிருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் வித்தியாசமான ரவுண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் சீசன் ஒன்றிலிருந்து ரேகாவும், சீசன் 2வில் இருந்து ஷகீலாவும், சீசன் 3யில் இருந்து ரோஷிணி ஹரிப்பிரியனும் இந்த ஆறு குக்குகளுடன் இணைந்து சமைத்தனர். அப்போது இம்யூனிட்டி பேண்டை பழைய சீசன்களில் இருந்து வந்தவர்கள் வென்று இருந்தால், இந்த வாரம் ஆறு பேரும் எலிமினேஷன் குக்கிங்கிற்க்கு தள்ளப்படுவார்கள் என்று நடுவர்கள் அறிவித்திருந்தனர். தற்போது விசித்ரா, அண்ட்ரியன், மைம் கோபி ஆகிய மூன்று பேரும் எலிமினேஷன் குக்கிங்கில் இருந்து தப்பித்து சேஃப் ஜோனுக்குச் சென்று இருக்கின்றனர்.


மேலும் ஷெரின், சிவாங்கி, சிருஷ்டி ஆகிய மூன்று பேருமே கடைசி இடத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மூன்று பேருமே நல்ல போட்டியாளர்கள் என்பதாலும், நல்ல சமைக்கக் கூடியவர்கள் என்பதாலும் யார் வெளியேறினாலும் அது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்