பாகற்காயை கொண்டு வந்து கொடுத்து மைம் கோபியை பழிக்கு பழி வாங்கிய சிவாங்கி.! இதோ ப்ரோமோ.!

வெளியிட்டது

பாகற்காயை கொடுத்து தற்போது மைம் கோபியை பழிக்கு பழி வாங்கியிருக்கிறார் சிவாங்கி் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இன்றைய எபிசோடில் அட்வான்டேஜை வென்றிருந்த சிவாங்கிக்கு ஒரு புது அட்வான்டேஜ் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மைம் கோபிக்கு பாகற்காயை கொடுத்து ஒரு இனிப்பு செய்ய சொல்லி தனது அட்வான்டேஜ் பயன்படுத்தி இருக்கிறார் சிவாங்கி. இதனால் அவர் பழிக்கு பழி வாங்கியிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மொத்தம் இரண்டு சுற்றுகள் நடைபெறும் முதலில் அட்வாண்டேஜ் 1 மற்றும் அட்வாண்டேஜ் 2 ஆகிய இரண்டு சுற்றுகள் நடைபெறும். இந்த அட்வான்டேஜை வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாவது நாள் சமையலில் 10 நிமிடங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் சமைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். மேலும் தனக்கு வந்த ஒரு உணவு வகை பிடிக்கவில்லை என்றால் அதை மாற்றிக் கொள்ளலாம், இல்லை வேறு யாருக்காவது இரண்டு பேருக்கு அந்த உணவை மாற்றிக் கொடுக்கலாம் என்று கூறப்படுவது வழக்கமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாகற்காயை கொண்டு வந்து கொடுத்து மைம் கோபியை பழிக்கு பழி வாங்கிய சிவாங்கி.! இதோ ப்ரோமோ.! 1
சில வாரங்களுக்கு முன்பு மைம் கோபி அட்வான்டேஜை வென்றிருந்தார். அப்போது அவருக்கு கோமாளியாக இருந்த குரேஷி சிவாங்கி தான் நமக்கு போட்டியாக இருக்கிறார், எனவே அவருக்கு பாகற்காயை கொடுத்து இனிப்பு வகை செய்ய சொல்லலாம் என ஐடியா கொடுக்க, கோபியிம் சிவாங்கிக்கு பாகற்காயை கொடுத்தார். பாகற்காயை வைத்து இனிப்பு செய்ய தெரியாத சிவாங்கி அந்த எபிசோடில் சிவாங்கி கண்கலங்கி அழுதார். பிறகு முந்தைய சீசன்களில் இருந்து போட்டியாளர்கள் வந்த போதும் சிவாங்கிக்கு பாகற்காய் கிடைத்தது. அப்போது அவர் நான் இந்த விளையாட்டிற்கு வரவில்லை என்று பேசி இருந்தார். இதனால் கோபமான நடுவர்கள் 15 எபிசோடு கடந்த பிறகு இது போல் பேசி எங்களை கோபப்படுத்தாதீர்கள் என்று சிவாங்கியை கண்டித்து இருந்தனர். இதனால் சிவாங்கி அன்றைய எபிசோடு முழுவதுமே முகம் வாடிய நிலையில் காணப்பட்டார் .அவர் முகத்தில் சிரிப்பே வரவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் நிலக்கடலை சட்னி அரைக்கும் அட்வான்டேஜ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. சிவாங்கிக்கு கோமாளியாக வந்த ஜிபி முத்து நிறைய சட்னியை அரைத்து அட்வான்டேஜ் டாஸ்க் 2 விற்கு சென்றிருந்தனர்.

அப்போது இரண்டாவது அட்வான்டேஜில் ஒரு பந்து நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இருந்து பொருட்களை தேடி கண்டுபிடித்து எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. கண்ணை கட்டிக்கொண்டு பொருட்களை எடுக்கும் இந்த டாஸ்க்கில் சிவாங்கி கூறிய தக்காளியை சரியாக கண்டுபிடித்து எடுத்து சிவாங்கிக்கு அட்வான்டேஜை ஜெயித்து கொடுத்திருந்தார் ஜி.பி முத்து. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் தான் ஜெயித்த அட்வான்டேஜ் பயன்படுத்தி சிவாங்கி பாகற்காயை மைம் கோபிக்கு கொடுத்து அவருக்கு ஒரு இனிப்பு செய்ய சொல்லி இருந்தார். சரியான நேரத்தில் மைம் கோபியை பழிக்குப் பழி வாங்கியிருக்கிறார் சிவாங்கி. ஆனால் அந்த பாகற்காயை கமர்கட்டு போல செய்து மைம் கோபி அசத்தியிருந்தார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Disney Hotstar Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்