அனைவராலும் விரும்பி பார்க்கக்கூடிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இந்த வாரம் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். இந்த வாரம் குக் வித் கோமாளி வெர்சஸ் பிக்பாஸ் என்று இரண்டு அணிகளாக பிரிந்து சமைக்க இருப்பதாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை அறிவிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தற்போது மூன்று சீசன்களை முடித்து நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 10 குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து குக்குகளாக சுருங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிஷோர் ராஜ்குமார், ராஜ் ஐயப்பன், மைம் கோபி, விஜே விஷால், சிவாங்கி, ஷெரின், சிருஷ்டி, மதுரை காளையன், ஆண்ட்ரியன், விசித்ரா என்று மொத்தம் பத்து குக்குகளுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே கிஷோர் ராஜ்குமார், ராஜ் ஐயப்பன், மதுரை காளையன், விஜே விஷால் என்று தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள் வெளியேறி வந்தனர். பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடக்கும் செட்டை அமைத்த அமைப்பாளர் கிரண் ஆகியோரை வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே இறக்கியிருந்தனர். தற்போது விசித்ரா, சிவாங்கி, மைம் கோபி, கிரண், சிருஷ்டி என மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தகுதியாய் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக விசித்ரா கடந்த வாரம் நடந்த போட்டியில் நேரடியாக முதல் ஃபைனலிஸ்டாக செலக்ட் ஆகி இருக்கிறார். வரும் வாரங்களில் செலிப்ரேஷன், எலிமினேஷன், வைல்ட் கார்டு என்று தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
எப்போதும் போல் இல்லாத அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக் பாஸ் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது இறுதி கட்டங்களை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸை சேர்ந்த பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜனனி, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். குக் வித் கோமாளி vs பிக்பாஸ் என்று இரு அணிகளாக சமைக்க இருப்பதாக தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை அறிவிக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television