உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் குறித்து தற்போது தனுஷ் தனது விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதற்கு உதயநிதி ஸ்டாலின் நெகழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார். எப்போதும் இல்லாத அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மாமன்னன் திரைப்படம் தான். நீண்ட இடைவெளிக்கு பின்னர் காமெடியனாக இருந்து வந்த வடிவேலு சீரியஸ் ரோலில் நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த படம் நாளை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது. மாரி செல்வராஜின் அடுத்த அதிரடியில் இந்தபடம் உருவாகி இருக்கிறது. உதயநிதி, வடிவேலுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜின் படம் என்றாலே ஏதாவது ஒரு சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இதுவரையில் அமைந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது மாமன்னன் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாமன்னன் படம் குறித்த சர்ச்சை எழுந்து வருவது வழக்கமாக இருக்கிறது. தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேசியதும், ஏஞ்சல் பட தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு என்று இந்த படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் தற்போது அனைத்து சிக்கல்களும் விலகி படம் நாளை தமிழகம் என்றும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் இன்று பிரபலங்கள் பலருக்கும் ஸ்பெஷல் ஷோவாக போட்டு காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அதில் தனுஷ் மாமன்னன் படத்தை திரையில் பார்த்து இருக்கிறார். இந்த படத்தை பார்த்த பின் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டுள்ள அவர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் மாமன்னன் திரைப்படம் ஒரு உணர்ச்சி பூர்வமான படம் மாரி கட்டுப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் சமரசம் இல்லாத நடிப்பை வழங்கி இருக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் இருவரும் தங்களது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இடைவேளை காட்சிகளுக்குப் பிறகு தியேட்டர் எல்லாம் வெடிக்கப் போகிறது. இறுதியாக ஏ ஆர் ரகுமானின் இசை மேலும் அழகு சேர்த்திருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “மிக்க நன்றி தனுஷ், நீங்கள் இல்லை என்றால் என் மாமன்னன் படம் நடந்திருக்கவே நடந்திருக்காது என்று நன்றி தெரிவித்து இருக்கிறார். அதேபோல் மாரி செல்வராஜூம் அந்த பதிவை பகிர்ந்து உங்கள் இதயத்தில் இருந்து வந்த இந்த வார்த்தைகளுக்காக மிக்க நன்றி..! நீங்கள் காட்டும் இந்த அன்பினால் நான் மிகுதியாக உணர்கிறேன். உங்களுக்கு என்னுடைய அதிகமான அன்பையும், இதயங்களையும் வழங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.!
Maamannan by @mari_selvaraj is an emotion ♥️ A big hug to you Mari. Vadivelu sir and @Udhaystalin have delivered a very convincing performance. Great work from Fahadh and @KeerthyOfficial. Theatres are gonna erupt for the interval block. finally @arrahman sir 🙏🙏♥️ BEAUTIFUL
— Dhanush (@dhanushkraja) June 28, 2023