டேய் காளை.! சுருட்டு உன் வால..! பஞ்ச் டயலாக் பேசிய ஜிபி முத்துவை பஞ்சர் ஆக்கிய காளையன்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. மூன்று சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு நகைச்சுவை சமையல் போட்டி நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் நகைச்சுவை நடிகர்கள் குக்குகளுடன் இணைந்து சமைப்பார்கள். அது குக்குகளுக்கு உதவியாக இல்லாமல் கோமாளித்தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. சமையலுக்கு நடுவில் கோமாளிகள் செய்யும் சுட்டித்தனங்களும் நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகளும் இணைந்து எப்படி குக்குகள் சிறப்பாக சமைக்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு காரணம். முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராகவும், இரண்டாவது சீசனில் கனி வெற்றியாளராகவும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிஹா வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டேய் காளை.! சுருட்டு உன் வால..! பஞ்ச் டயலாக் பேசிய ஜிபி முத்துவை பஞ்சர் ஆக்கிய காளையன்.! 1

தற்போது நான்காவது சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் வழக்கம்போல் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்கின்றனர். ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சுனிதா, மணிமேகலை, புகழ், குரேஷி ஆகிய நான்கு பழைய கோமாளிகள் இருந்த நிலையில், தற்போது மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து, ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற புதிய கோமாளிகள் பலரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். மணிமேகலை விலகி விட்டதால் அவருக்கு பதிலாக பழைய ஜோக் தங்கதுரை கோமாளியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 குக்குளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கிஷோர் வெளியேறிவிட தற்போது ஒன்பது குக்குகள் சமைத்து வருகின்றனர் அதில் நடிகை சிருஷ்டி, சிவாங்கி, ஷெரின், ராஜ் ஐயப்பன், எழில், விசித்ரா, விஜே விஷால், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன், மைம் கோபி போன்றவர்கள் குக்குகளாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் கொன்றால் பாவம் படத்தின் ப்ரோமொஷன்காக வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகிய இருவரும் வந்துள்ளனர். சந்தோஷ் பிரதாப் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழிச்சியில் சீசன் 3ன் போட்டியாளர் ஆவார். இந்த முறை குக்குகளுக்கு பொறி உருண்டை செய்யும் அட்வான்டேஜ் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதில் கோமாளிகள் அரிசியை மண்ணில் போட்டு பொரித்து பொறியாக மாற்றிய பின்பு பொறி உருண்டை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மும்முரமாக பொறி செய்து வருகின்றனர். அப்போது ஜிபி முத்து காளையன் பற்றி பஞ்ச் ஒன்றை பேசி கொண்டிருக்கிறார். டேய் காளை சுருட்டுடா உன் வாலை என்று பேசி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் வெங்கடேஷ் பட் ஜிபி முத்துவின் கண்களை மூடிவிட எதிரில் காளையன் வந்து நின்று விடுகிறார். பின்னர் வழக்கம் போல ஜிபி முத்துவை அடித்து துவைக்கிறார் காளையன். செம்ம காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்