இப்பொது தமிழகத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. இந்த நிகழ்ச்சியை பார்க்கத்தவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்கள் அனைத்துமே நன்றாக தெரியும். விஜய் டிவியின் மற்றொரு வெற்றிகரமான நிகழ்ச்சியான இதில் இப்பொது பைனல் நெருங்கி வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியின் பைனல் இந்த வார ஒளிபரப்பாக உள்ளது.

அம்மு அபிராமி, அந்தோணி தாசன், தர்ஷன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, ரோஷினி ஹரிப்ரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருதிக்கா, விதியுலேகா ராமன், ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த் என பலர் கலந்து கொண்டனர். கோமாளிளாக சிவாங்கி, மணிமேகலை, பரத், பாலா, புகழ் போன்றோர் கோமாளிகளாக கலக்கி வருகிறார்கள். தொகுப்பாளராக ரக்ஷனும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் பங்கெடுத்து வருகிறார்கள்.
பல வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றிற்கு ஸ்ருதிகா, அம்மு அபிராமி, விதியுலேகா, தர்ஷன் ஆகியோர் முன்னேறியுள்ளனர். இது 3வது சீசன். இரண்டு சீசன்களை மிகவும் வெற்றிகரமாக முடித்துள்ள இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக காத்துள்ளனர்.
அண்மையில் முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று ஷூட்டிங்கை முடித்துள்ள கோமாளியாக கலக்கிவரும் சிவாங்கி அதுகுறித்த இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். ஆனால் அவர் அந்த சேட்டை மட்டுமே பதிவிட்டுள்ளாரே தவிர நிகழ்ச்சியில் நடைபெற்ற மற்ற எந்த ஒரு விவரங்கள் பற்றியும் அவர் கூறவில்லை. அந்த பதிவு இப்பொது வைரலாகி வருகிறது.