Categories: சினிமா

சைக்கிள் ஓட்ட தெரியாதவன் சைக்கிள் ஓட்டுன மாதிரி இருக்கு இந்த படம்.! தசரா படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

வெளியிட்டது

நேற்று வெளியான தசரா திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ், தீக்ஷித் ஷெட்டி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தசரா. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி இருந்தது. புஷ்பா படத்தை இயக்கிய இயக்குனரின் உதவியாளராக இருந்த ஸ்ரீகாந்த் ஒடேலா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் ஒன்றை காட்டுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த நிலக்கரி சுரங்கத்தை நம்பித்தான் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அங்கு சிலுக்கு பார் என்கிற ஒரு சாராயக்கடை இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் ஓட்ட தெரியாதவன் சைக்கிள் ஓட்டுன மாதிரி இருக்கு இந்த படம்.! தசரா படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை 1
அந்த சாராயக் கடையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே உள்ளே சென்று குடிக்க முடியும் என்கிற வழக்கம் இருக்கிறது. அப்போது அங்கு ஒரு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் யார் ஜெயித்து வருகிறார்களோ அவர்கள் தான் அந்த பாரை நடத்த முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. சரி எலக்ஷனில் ஜெயித்து யார் இந்த கடையை பிடிக்கப் போகிறார்கள் என்கிற கதை நகரும் என்று எதிர்பார்த்தால், அங்கிருந்து அப்படியே ஹீரோ ஹீரோயின் அவரது நண்பர் என மூன்று பேருக்கு நடுவே நடக்கும் ஒரு முக்கோண காதல் கதையை காட்டுகிறார்கள். சரி இதெல்லாம் முடிந்து இரண்டாவது பாகத்தில் ஏதோ கதை இருக்கும் போல என்று நினைத்தால் வில்லனுக்கு ஹீரோயின் மீது பத்து வருடமாக ஒரு கண் இருப்பதாக காட்டுகிறார்கள். அவர் மொட்டை மாடியில் நின்று கொண்டு கையில் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டு ஹீரோயினை உத்து உத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் அவர் 10 வருடமாக ஹீரோயினை காதலிக்கும் லட்சணம்.

முதலில் நிலக்கரி சுரங்கத்தை காட்டுகிறார்கள். அப்புறம் பாரை காட்டுகிறார்கள். அப்புறம் லோக்கல் பாடி எலக்சன் என்று சொல்கிறார்கள். அதன் பிறகு முக்கோண காதல் கதை என்று சொல்கிறார்கள். பின்னர் வில்லனுக்கு ஹீரோயின் மீது ஒரு கண் என்று சொல்கிறார்கள். இதை பார்க்கும் பொழுது எப்படி இருக்கிறது என்று சொன்னால் சைக்கிள் ஓட்ட தெரியாதவன் குரங்கு பெடல் போட்டு, காலை தரையில் வைத்து எப்படியோ ஓட்ட கற்றுக்கொண்டு ஏறி சைக்கிளில் உட்கார்ந்து விடுவான். அப்புறம் கொஞ்ச தூரம் ஓட்டிய பின்பு இறங்க தெரியாமல் சைக்கிளிலேயே உட்கார்ந்து சுற்று சுற்றி வருவான். இதுபோல ஆகிவிட்டது இந்தப் படத்தின் கதை. முடிக்கத் தெரியாமல்எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ கொண்டு போய் முடித்து விட்டனர் என்று காட்டமாக விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்