தமிழில் சின்னத்திரை தொகுப்பாளினியாக தன்னுடைய வாழக்கையை விஜய் டிவியில் துவங்கியவர் தொகுப்பாளினி DD எனப்படும் திவ்யதர்ஷினி. இவர் எப்போது விஜய் டிவியில் நுழைந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் ரோபோ ஷங்கர் ஒரு முறை நக்கலாக பதிவிட்டது போல, “கை குழந்தையா இருக்கும் போதே விஜய் டிவி வாசலிலே DD’யா போட்டுட்டு போய்ட்டாங்க அவுங்க அம்மா அப்பா” என கூறும் அளவிற்கு விஜய் டிவி துவங்கிய காலத்தில் இருந்தே அந்த சேனலில் இருந்து வருகிறார் DD. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DD தொகுத்து வழங்கிய “காபி வித் DD, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 என பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற நட்சத்திர தொகுப்பாளினியாக உயர்ந்தார். குறிப்பாக காபி வித் DD நிகழ்ச்சியில் திரை துறை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனால் சினிமாத்துறையினருக்கும் இவர் ரொம்ப பிடித்து போன தொகுப்பாளினியானார்.
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள், படங்களின் ஆடியோ லாஞ்சுகள், மிக பெரிய நட்சத்திர கூட்டங்கள் என அனைத்திற்கும் இவரே தொகுப்பாளினி. டிவி நட்சத்திரம் என்பதை தாண்டி இவரே தனியாக ஒரு பெரிய நட்சத்திரமானார். சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லுரியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை முடித்துள்ள இவர் அங்கேயே சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
பாலிவுட்டில் இப்பொது பான் இந்திய படமாக உருவாகி வரும் படம் “பிரம்மாஸ்திரா”. பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பிர் கபூர், அலியா பட், நாகார்ஜூனா, மௌனி ராய், அமிதாப் பச்சன் என பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்க மிக பெரிய பொருட்செலவில் ஆக்ஷன், பாண்டஸி படமாக உருவாகியுள்ள இந்த படம் உருவாகியுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
Video Courtesy – Dharma Productions.
தமிழிலும் இந்த படம் வெளியாகும் நிலையில் அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் நடிகர் ரன்பிர் கபூர் இறங்கியுள்ளார். ஏற்கனவே வெளியான ட்ரைலர் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மேலும் பயங்கரமாக இந்த படத்தை இங்கும் ப்ரோமொடே செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு பங்காக பேட்டி ஒன்றை ஏற்பாடு செய்ய அடர்க்கு தொகுப்பாளினியாக நம் DD’யே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரன்பிர் கபூரும், DD’யும் சேர்ந்து ஜாலியாக நடனமாடி இருக்கிறார்கள். அந்த விடியோவை நீங்களும் காண…..
Video Courtesy – KK Peak.