Categories: சினிமா

திடீரென ரஜினியை புகழ்ந்து தனுஷ் போட்ட ட்வீட்.. என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க.

வெளியிட்டது

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ். அப்போது இவர்களின் காதல் பிரச்சனை சர்ச்சையானது. அதற்கு காரணம் தனுஷை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்பதுதான் காரணமாக இருந்தது. ஆனால் பல எதிர்ப்புகளையும் மீறி தன்னுடைய காதலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கரம் பிடித்தார் நடிகர் தனுஷ். 18 ஆண்டு காலம் இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திடீரென நானும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிவதாக அறிவித்திருந்தார் தனுஷ். 18 ஆண்டு கால வாழ்க்கையில் நல்ல தோழியாக இருந்தார், இனியும் அவர் எனக்கு நல்ல தோழியாக இருப்பார், நாங்கள் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து விடுவதாகவும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் இது குறித்து ரஜினிகாந்த் இடமிருந்தோ ஐஸ்வர்யாவிடம் இருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

திடீரென ரஜினியை புகழ்ந்து தனுஷ் போட்ட ட்வீட்.. என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க. 1

 

இவர்களுக்கு யாத்ரா என்ற மூத்த மகனும் லிங்கா என்ற இளைய மகனும் இருக்கிறார்கள். இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்கள் பிரிந்து விட்ட போதிலும் யாத்ரா மற்றும் லிங்காவை அடிக்கடி வெளிநாடு அழைத்துச் செல்வது, டூருக்கு அழைத்துச் செல்வது என்று தனுஷ் தனது கடமையை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஒரு புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தனது மூத்த மகன் யாத்ரா பள்ளியில் விளையாட்டில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்காக தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒன்றாக இணைந்து சென்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. பலரும் நீங்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று தங்களது ஆசையை தெரிவித்து வந்தனர்.

தற்போது மீண்டும் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதில் தனது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரை பலரும் வரவேற்று வருகின்றனர். கண்ணாடி அணிந்து வயதான தோற்றத்தில் ஜெயிலராக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பார்க்கவே மிக கெத்தாக இருக்கிறது. அந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாவ் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். இதை பார்த்த தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்கள் விரைவில் தனுஷ் ஐஸ்வர்யா இணைந்து விடுவார்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். Twitter Original Source From: Dhanush K Raja

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்